சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. நாடு முழுக்க நீட் தேர்வு ஒத்திவைப்பு .. மறு தேதி அறிவிக்கப்படவில்லை!

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வுக்கு மறு தேதி அறிவிக்கப்படவில்லை.

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    கொரோனா காரணமாக இந்தியாவில் 843 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 3 நாட்கள் ஆகிறது.

    Coronavirus: NEET exam postponed by central government due to epidemic

    மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தீவிரமாக ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறார்கள். நாடு முழுக்க பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வுக்கு மறு தேதி அறிவிக்கப்படவில்லை.

    நீட் தேர்வு தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி நடக்க இருந்தது, கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, ஜனவரி 1-ம் தேதி வரை நடந்தது. நீட் தேர்வு காரணமாக இதுவரை தமிழகத்தில் அனிதா தொடங்கி 6க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகி உள்ளனர்.

    வருடா வருடம் இதை மக்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனாலும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: NEET exam postponed by the central government due to the epidemic in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X