சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓமிக்ரான் தோன்றியது எப்படி? வேக்சின் அரசியலால் வீழ்ந்த "பிக்பாஸ்" நாடுகள்.. சொந்த செலவில் சூனியம்!

Google Oneindia Tamil News

சென்னை: மேற்கு உலக நாடுகள் செய்த வேக்சின் அரசியல் தற்போது அந்த நாடுகளுக்கே எதிராக திரும்பி உள்ளது. அதிக பொருளாதார வசதி கொண்ட நாடுகள் வேக்சின் சமத்துவத்தை கடைபிடிக்காமல் போனது தற்போது சர்வதேச அளவில் பிரச்சனையாகி உள்ளது.

உலகம் முழுக்க தற்போது 110க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஓமிக்ரான் கொரோனா மீதான அச்சம் உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெல்டாவை விட இதுஅதிக ஆபத்து கொண்டதாக உள்ளது. இதனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அதோடு மிக மிக ஆபத்து கொண்ட, பின்விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒன்று என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை- ராகுல் காந்தி கடும் தாக்கு நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை- ராகுல் காந்தி கடும் தாக்கு

குறைந்த வேக்சின்

குறைந்த வேக்சின்

இப்படி திடீரென ஓமிக்ரான் தோன்றுவதற்கு பெரிய காரணம் எல்லாம் இல்லை. வேக்சின் சமத்துவமின்மைதான் இதன் பரவலுக்கு பின் உள்ள ஒரே காரணம். இப்போது ஓமிக்ரான் பரவும் தென்னாப்பிரிக்க நாட்டு மக்களில் 40 சதவிகிதத்திற்கும் மேலானோர் வேக்சின் போடாதவர்கள். அல்லது ஒரு டோஸ் போட்டுவிட்டுவிட்டு இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்கள். வேக்சின் போடப்படாதவர்கள் இடையேதான் ஓமிக்ரான் கொரோனா பரவிக்கொண்டு இருக்கிறது.

தென்னாப்பிரிக்க நாடுகள்

தென்னாப்பிரிக்க நாடுகள்

பல தென்னாபிரிக்க நாடுகளில் இப்போதுதான் 45+ வயது கொண்டவர்களுக்கு வேக்சின் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓமிக்ரான் கொரோனா 18 -40 வயது கொண்ட வேக்சின் போடாத பலரை தாக்கி வருகிறது. வேக்சின் போடாததுதான் ஓமிக்ரான் வகை கொரோனா உருவாவதற்கு முதல்-முற்றும் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

உருமாறிய கொரோனாவை உருவாக்கும்

உருமாறிய கொரோனாவை உருவாக்கும்

ஏனென்றால் வேக்சின் போடாத மக்கள் இருக்கும் வரை கொரோனா பரவிக்கொண்டே இருக்கும். கொரோனா பரவ பரவ அது உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இந்த பரவல்தான் தீவிரமான உருமாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது ஓமிக்ரான் பரவவும் இதுவே காரணம். வேக்சின் போடாத மக்களிடையே பரவி அவர்களிடையே உருமாற்றம் அடைந்து ஓமிக்ரான் உருவாகி உள்ளது. சர்வதேச பணக்கார நாடுகளின் வேக்சின் அரசியலும் இதற்கு மிக முக்கிய காரணம்... எப்படி என்று பார்க்கலாம்.

மேற்கு உலக நாடுகள்தான் காரணம்

மேற்கு உலக நாடுகள்தான் காரணம்

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களுக்கான வேக்சினை முன்கூட்டியே புக் செய்துவிட்டன. அதிலும் அமெரிக்கா வேக்சின் ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளித்து, அதை வைத்து பல மில்லியன் டோஸ்களை முதல் ஆளாக வாங்கிகொண்டது. இங்கிலாந்து, பல ஐரோப்பிய நாடுகளும் இதைத்தான் செய்தது. சர்வதேச வல்லுரசு நாடுகள் எல்லாமே தங்களின் தேவையை விட இரண்டு மடங்கு வேக்சின்களை புக் செய்து கையிருப்பில் வைத்து இருக்கிறது.

வேக்சின் தரவில்லை

வேக்சின் தரவில்லை

குழந்தைகளுக்கு வேக்சின், 2 டோஸ், கூடுதலாக பூஸ்டர் டோஸ் என்றெல்லாம் வல்லரசு நாடுகள் வேக்சின் போட்டு வருகின்றன. பல இன்னும் ஸ்டாக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில் மீதம் இருக்கும் மிச்சம் மீதி கொஞ்சத்தை உலக சுகாதார மையத்தின் வேக்சின் ப்ரோகிராமன் கோவாக்ஸ் திட்டத்திற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் வழங்கி வருகின்றன. எக்ஸ்பைரி ஆகும் முன் அதை தானம் அளித்து வருகின்றன. ஆனால் அதுவும் கூட சில லட்சம் டோஸ்கள்தான்.

செல்லவில்லை

செல்லவில்லை

இதனால் மூன்றாம் உலக நாடுகளுக்கு வேக்சின் சென்று சேரவில்லை . முக்கியமாக ஆப்ரிக்க நாடுகள் வேக்சின் வாங்க முடியவில்லை. அவர்களே காசு கொடுத்து வாங்கலாமே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சுடன் போட்டி போட்டுகொண்டு ஆப்ரிக்க நாடுகள் சர்வதேச தனியார் வேக்சின் நிறுவனங்களிடம் வேக்சின் புக் செய்ய முடியாது. அவர்களிடம் போதிய நிதி இல்லை. போட்டியில் சமத்துவம் இல்லை. இதனால் அந்த நாடுகளுக்கு வேக்சின் மிக தாமதமாகவே கிடைத்தது. இப்போதும் கூட பல ஆப்ரிக்க நாடுகளில் 20 சதவிகிதம் அளவிற்கு கூட வேக்சின் போடப்படவில்லை.

எல்லோரும் பாதுகாப்பு இல்லை என்றால்

எல்லோரும் பாதுகாப்பு இல்லை என்றால்

இதுதான் தற்போது தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானாவில் ஓமிக்ரான் உருவாக காரணமாக அமைந்துள்ளது. அங்கு இதுவரை 917,684 பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. அதாவது 38.28% பேருக்கு மட்டுமே குறைந்தது ஒரு டோஸாவது போடப்பட்டுள்ளது. 506,955 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது. 21.15% பேர் மட்டுமே இரண்டு டோஸ் போட்டுள்ளனர்.

மக்கள்

மக்கள்

இப்படி மக்கள் குறைவாக வேக்சின் போட்ட காரணத்தால் அங்கு கொரோனா தொடர்ந்து பரவி வந்தது. டெல்டா, பீட்டா, காமா வகை கொரோனா அதிகம் பரவியது. இதெல்லாம் சேர்ந்து இப்போது அங்கு ஓமிக்ரான் உருவாக காரணம் ஆகியுள்ளது. மக்கள் வேக்சின் கிடைக்காமல் கொரோனா ஏற்பட்டு, அதை பிறருக்கு பரப்பி, அது உருமாற்றம் அடைந்து அடைந்து ஓமிக்ரான் உருவாகி உள்ளது. சர்வதேச அளவில் நடந்த வேக்சின் அரசியல் ஓமிக்ரான் கொரோனாவை உருவாக்கிவிட்டுள்ளது.

Recommended Video

    US Economyஐ பாதிக்கும் Omicron! அப்போ India? | OneIndia Tamil
     தென்னப்பிரிக்கா கோபம்

    தென்னப்பிரிக்கா கோபம்

    ஆனால் இந்த சம்பவத்திற்கு தென்னாப்பிரிக்காதான் இப்போதும் அதிக விலைகொடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே வறுமையில் உள்ள ஆப்ரிக்க நாடுகள் இதனால் மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கு உலக நாடுகளிடம் இருந்து எதிர்கொள்ளும். ஏற்கனவே பயண கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. இது ஒருவகையில் தென்னாப்பிரிக்காவிற்கும், ஆப்ரிக்காவிற்கும் எதிரான நவீன தீண்டாமையாக உருவெடுக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. நாங்கள் முதல் ஆளாக முன்கூட்டியே ஓமிக்ரான் குறித்து அறிவித்தோம், ஆனால் உலக நாடுகள் எங்களை குற்றவாளி போல பார்க்கின்றன என்று தென்னாபிரிக்க மக்கள் வருத்தப்படவும் இதுவே காரணம்!

    English summary
    Coronavirus Omicron: How vaccine supremacy backfired west nations with the emergence of new variants.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X