சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதீத விழிப்புணர்வு தேவைப்படுகிற கட்டமான 4வது வாரத்தில் தமிழகம்.. கமல்ஹாசன் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: அதீத விழிப்புணர்வு தேவைப்படுகிற கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கமல் ஹாசன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 500 பேருக்கு பரவி உள்ளது
'
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 100பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் கொரானா பரவி வருகிறது

கொரோனா வந்து கவனிப்பில்லாத முதியவர்கள் படுக்கையிலேயே மரணம்.. மீட்ட ராணுவம்.. ஸ்பெயினில் அதிர்ச்சி கொரோனா வந்து கவனிப்பில்லாத முதியவர்கள் படுக்கையிலேயே மரணம்.. மீட்ட ராணுவம்.. ஸ்பெயினில் அதிர்ச்சி

144 தடை உத்தரவு

இதை தடுக்க இந்தியாவில் . மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்பட 32 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிதேசங்களில் 548 மாவட்டங்கள் லாக் டவுன் (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரு இடத்தில் குவிவதை தடுக்கவும் ,வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும் அனைத்து பொதுபோக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் தற்போதைய நிலையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தையும் அடைக்க உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தையும் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளது.

அதீத விழிப்புணர்வு தேவை

அதீத விழிப்புணர்வு தேவை

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கமல் பேசுகையில், அதீத விழிப்புணர்வு தேவைப்படுகிற கட்டமான 4வது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கு. கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்வதை மக்களே தவிர்த்துவிடுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாங்க." என்று கூறியுள்ளார்.

தேர்வு ஒத்திவைப்பது

தேர்வு ஒத்திவைப்பது

முன்னதாக கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டுவிட் பதிவில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், கூட்டமாக உள்ள பகுதிகளை தவிர்க்கவும் என்ற அரசின் உத்தரவுகளை, அரசே மதியாமல் பொதுத் தேர்வை நடத்தினால் மக்களின் பங்களிப்பும் முழுமையாக இராது என்பதை அரசாங்கம் புரிந்துணர்ந்து 11,12ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்றார். இந்நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மட்டும் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
coronavirus out break: kamal haasan released important awareness video . he said people should not go out home
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X