சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பு- தமிழகத்தில் ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும்: ப. சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மாநில எல்லைகளை மூடினால் மட்டும் போதாது; ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை நாடு முழுவதும் மக்களின் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

Coronavirus: P Chidambaram urges to impose Curfew in Tamilnadu

இதனையொட்டி நாடு முழுவதும் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், பொதுபோக்குவரத்து உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை மாநில எல்லைகள் வரும் 31-ந் தேதி வரை மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும். மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல் படுத்த வேண்டும்.

ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு மக்கள் உலக நடப்புகளை அறிந்தவர்கள், புத்திசாலிகள். அரசு நடவடிக்கையைப் பாராட்டுவார்கள். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

English summary
Former Union Minister P Chidambaram has urged that TamilNadu Govt should impose curfew in the state to prevent Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X