சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்ல சேதி.. தமிழகத்தில் கொரோனா பாதித்த ஒரே நபரும் குணமடைந்தார்.. இன்று வீடு திரும்பும் இன்ஜினியர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த ஒரே நோயாளியும், சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் என்ற நல்ல சேதியை சொல்லியுள்ளார், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர்.

Recommended Video

    தமிழகத்தில் 2 பேருக்கு கொரானா? | வந்து விட்டது கொரானா தடுப்பூசி

    கொரானா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த சோதனை நடைபெற்றது.

    Coronavirus patient in Tamil Nadu, is returning home today

    பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்தார் விஜயபாஸ்கர்: கொரோனா பரவலை தடுக்க தமிழக- கேரள எல்லையில் நுழையும் வாகனங்கள் முழுவதையும் தீவிரமாக காணிக்க காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று உள்ளதா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 11 பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

    கொரோனாவால், பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் இன்ஜினியர் குணமடைந்து விட்டதாகவும் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறினார்.

    டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது தொழிலதிபர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

    English summary
    The only patient infected with coronavirus in Tamil Nadu, is returning home today, said Health Minister Vijayabaskar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X