சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது.. மதுரையில் கொரோனா நோயாளி கவலைக்கிடம்.. விஜய பாஸ்கர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மதுரையில் ஒருவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது? நீடிக்கும் மர்மம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் எந்த வெளிநாடும் போகாமல்... வெளி மாநிலத்திற்குக் கூட போகமல் இருந்த ஒருவருக்கு கொரோனா பரவி உள்ளது.

    இப்படி பரவுவதற்கு பெயர் community spread என்பார்கள். அதாவது வெளியிலிருந்து வந்த நபர்களால் உள்ளூரில் உள்ள மக்களிடம் பரவுவது ஆகும். அப்படித்தான் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு பரவி உள்ளது.

     தேவையானதை செய்ய அரசு தயார்

    தேவையானதை செய்ய அரசு தயார்

    இந்நிலையில் சட்டசபையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 28 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மதுரையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி கவலைக்கிடமாக இருக்கிறார், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களுக்கு தேவையானதை செய்ய அரசு தயாராக இருக்கிறது. கொரோனா பரவும் வேகத்தை கருத்தில் கொண்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

     விழிப்புடன் இருக்க

    விழிப்புடன் இருக்க

    கொரோனா தொடர்பான அரசின் உத்தரவுக்கு மக்களின் ஒத்துழைப்பு முக்கியம். நோய் வேகமாக பரவி வருகிறது, நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் தமிழக அரசின் உத்தரவை மக்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று சமூகம் முழுகக பரவுவதை தடுக்கவே தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

     விஜயபாஸ்கர் பேச்சு

    விஜயபாஸ்கர் பேச்சு

    நோய் பரவால் தடுக்க மக்கள் வீட்டுகள் இருக்க வேண்டியது அவசியம். சமூக தொற்றாக மாறாமல் இருக்க மக்கள் இதை கடைபிடித்தே ஆக வேண்டும் . டெல்லியில் இருந்து வந்த இளைஞருடன் தொடர்பில் உள்ள 193 பேரை கண்காணித்து வருகிறோம். மிகவும் சவாலாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் கொரோனா பரவுவதால் மக்கள் ஒத்துழைப்பு அவசியம்" என அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

     தப்பிக்க ஒரே வழி

    தப்பிக்க ஒரே வழி

    கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் இதுவரை 15 பேருக்கு ஏற்பட்டுள்ளது என்றும், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 112 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஒரு பேரிடர். இதில் இருந்து நம்மை நாமே சமூக விலக்கலை கடைபிடித்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். எனவே நாம் நம்மை தனிமைப்படுத்தி கொள்வது தான் கொரோனாவில் இருந்து தப்பி ஒரே வழி.

    English summary
    Tamil Nadu Health Minister Dr C Vijayabaskar said that Coronavirus patient Serious condition in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X