சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மக்களே.. கொரோனா பற்றி டாக்டரிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசலாம்.. மாநகராட்சி ஏற்பாடு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பற்றி, பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக மருத்துவரிடம் கேட்டுப் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதுதான் நல்லது என்ற எண்ணம் இருக்கும் . மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை இருப்பது, செலவு, போதிய சுகாதாரம் இல்லாமல் இருப்பது, உணவு உள்ளிட்ட பிற தேவைகளுக்காக தங்களது குடும்பத்தினரை மருத்துவமனைக்கு உள்ளே கூட்டிக்கொண்டு வைத்து, பிற நோயாளிகள் அவர்களுடன் நெருங்கி பழகுவதற்கான பாதிப்பு ஏற்படுவது, இது போன்ற பல்வேறு காரணங்களால் நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதை விரும்பவில்லை.

Coronavirus patients can contact Chennai doctors via WhatsApp video call

அதேநேரம் வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றால் எப்போது என்ன ஆகுமோ, உடல்நிலை எப்படி போகுமோ என்ற ஒரு அச்சம் இருக்கிறது. எந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும் , எப்போது எந்த மாதிரி பக்குவம் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுவான வழிகாட்டுதல்கள் இருந்தாலும், ஒவ்வொருவரின் உடல்நி,லை ஒவ்வொருவரின் அறிகுறி என்பது மாறுபட்டு இருக்கும் என்பதால் தனித்தனியாக மருத்துவர்களின் கண்காணிப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

இதுபோன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில்தான், சென்னை மாநகராட்சி, வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக மருத்துவர்களை தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதோ அதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு Whatsapp Video மூலம், மருத்துவரின் கருத்துகளைப் பெற பெருநக மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள வாட்ஸாப் தொடர்பு எண்கள் 9498346510,9498356511, 9498346512,9498346513, 9498346514

English summary
Common people can get coronavirus awareness from doctors via WhatsApp video call, greater Chennai corporation issued a press release on doctor's phone numbers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X