சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.. மனதை மாற்றிய மோடி.. பேச்சில் தெரிந்த மாற்றம்.. அந்த விஷயம் மிஸ்ஸிங்!

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் இன்றைய பேச்சில் முக்கியமான விஷயம் ஒன்று மிஸ்ஸாகி உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Recommended Video

    We will focus on Hotspots in all over India says Modi.

    பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவிற்கு எதிராக நாம் வெற்றிபெற தொடங்கி இருக்கிறோம். இந்தியாவே இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது, என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். மோடியின் இந்த பேச்சு பெரிய வைரலாகி உள்ளது.

    ஹாட்ஸ்பாட்கள்தான் முக்கியம்.. கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்போம்.. பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்! ஹாட்ஸ்பாட்கள்தான் முக்கியம்.. கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்போம்.. பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்!

    மோடியின் பேச்சில் மிஸ்ஸிங்

    மோடியின் பேச்சில் மிஸ்ஸிங்

    ஆனால் மோடியின் இன்றைய பேச்சில் முக்கியமான விஷயம் ஒன்று மிஸ்ஸாகி உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி கொரோனா பாதிப்பிற்கு பின் எப்போது மக்கள் முன்னிலையில் பேசினாலும் மக்களுக்கு ஏதாவது டாஸ்க் கொடுப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். உதாரணமாக முதல் முறை ஜனதா ஊரடங்கு அறிவித்த போது ஞாயிற்றுக்கிழமை மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். மாலைக்கு பின், வீடு வாசலில் வந்து கைதட்ட வேண்டும்.

    மக்கள் தவறு செய்தனர்

    மக்கள் தவறு செய்தனர்

    மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்ட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பிரதமர் மோடியின் இந்த பேச்சை தவறாக புரிந்து கொண்ட சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து கைதட்ட தொடங்கினார்கள். சாலையில் இறங்கி கொரோனாவை திருவிழா போல கொண்டாட தொடங்கினார்கள். முக்கியமாக தனி மனித விலகலை கடைபிடிக்காமல் சாலையில் இருந்து தட்டுகளில் குச்சி வைத்து வேகமாக தட்டி சத்தம் எழுப்பி கொண்டாடினார்கள்.

    பலருக்கும் கொரோனா பரவியது

    பலருக்கும் கொரோனா பரவியது

    இதனால் பலருக்கு கொரோனா பரவி இருக்கும். மக்கள் இப்படி வெளியே வந்தது தவறு என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 3ம் தேதி மக்கள் முன்னிலையில் பேசிய மோடி, மக்கள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே விளக்கு ஏற்ற வேண்டும். ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடம் மின் சாதனங்களை அணைத்துவிட்டு விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

    விமர்சனங்களை சந்தித்தது

    விமர்சனங்களை சந்தித்தது

    ஆனால் இப்போதும் மக்கள் பலர் வெளியே வந்து வெடிகளை வெடித்தனர். கொரோனாவை தீபாவளி போல கொண்டாடினார்கள். வெளியே கூட்டம் கூட்டமாக வந்து கையில் தீப்பந்தம் ஏந்தியபடி சாலையில் சென்றார்கள். இதுவும் தனிமனித விலகலை தடுக்கும் வகையில் இருந்தது. மக்கள் பலர் இப்படி கூட்டம் கூட்டமாக வெளியே வந்தது விமர்சனங்களை சந்தித்தது.

    பிரதமர் மோடி டாஸ்க்

    பிரதமர் மோடி டாஸ்க்

    அதன்பின் பிரதமர் மோடி வேறு சில டாஸ்க் கொடுக்க போகிறார் என்று நிறைய பொய்யான செய்திகள் வந்தது. அதாவது பிரதமர் மோடி மக்கள் எல்லோரையும் 5 நிமிடம் எழுந்து நிற்க சொல்லி இருக்கிறார். பிரதமரின் பணியை பாராட்டும் வகையில் 5 நிமிடம் எழுந்து நிற்க சொன்னார் என்று நிறைய பொய்யான செய்திகள் வெளியானது. இதை பார்த்து கவலை அடைந்த பிரதமர் மோடி கடந்த முறை முக்கியமான விஷயம் ஒன்றை சொன்னார்.

    சிக்கலில் மாட்டி விட வேண்டாம்

    சிக்கலில் மாட்டி விட வேண்டாம்

    அதில், என்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம் என்றும், நான் அவ்வாறு எந்த ஒரு தகவலையும் பகிரவில்லை. நான் யாருக்கும் புதிதாக டாஸ்க் எதுவும் கொடுக்கவில்லை. எனக்கு நீங்கள் மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்தால் பசியால் வாடும் ஏழை குடும்பங்களுக்கு உதவுங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார். இந்த நிலையில் இந்தமுறை பேசிய பிரதமர் மோடி முற்றிலுமாக டாஸ்க் கொடுப்பதை தவிர்த்து உள்ளார்.

    முற்றிலுமாக தவிர்த்தார்

    முற்றிலுமாக தவிர்த்தார்

    நாம் ஏதாவது டாஸ்க் கொடுத்தால் மக்களே வெளியே வந்து ஏதாவது செய்கிறார்கள். கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். இது சிக்கலான விஷயம். அதனால் டாஸ்க் கொடுக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். இந்த முறை அதனால்தான் பேச வேண்டியதை மட்டும் பேசிவிட்டு, அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு மோடி சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Coronavirus: PM Modi didn't give any task to people this time on his speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X