சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இம்மீடியட்டா இதையெல்லாம் பண்ணுங்க.. டெஸ்ட்டை அதிகரிங்க.. சென்னையை காப்பாத்தலாம்.. அன்புமணி யோசனை

சென்னையில் தொற்றை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தொற்று வைரஸ் பரவலில் லீடிங்-கில் உள்ளது சென்னைதான்.. மாநகரத்தில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று ஒருசில வழிமுறைகள், யுக்திகளை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் பாமகவின் அன்புமணி ராமதாஸ்!!

Recommended Video

    காற்றில் பறந்த சமூக இடைவெளி... அத்தியாவசிய பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்

    எம்பி அன்புமணி ராமதாஸ் ஒரு சீனியர் டாக்டர்.. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்.. அப்போது பல சீர்திருத்தங்களை நாடு முழுவதும் அமல்படுத்தியவர்.. தமிழகத்தில் டெங்கு உட்பட எந்த அபாயம் வந்தாலும் சரி, அதற்கு முதல் ஆளாக வந்து எச்சரிக்கை தந்து அறிவுரைகளை தந்துவிடுவார்.

    இந்த கொரோனா விஷயத்தில் அன்புமணியின் ஈடுபாடும் சரி, டாக்டர் ராமதாஸின் ஈடுபாடும் சரி அளப்பரியது.. ஆரம்பத்தில் இருந்தே, மக்களுக்கு தினமும் ஏதாவது ஒரு டிப்ஸ்களை தந்து இன்றுவரை அலார்ட் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

    சென்னை

    சென்னை

    அந்த வகையில் சென்னையில் தொற்று பரவல் குறித்து சில யுக்திகளை தந்துள்ளார் அன்புமணி.. இதற்கு காரணம், தமிழகத்தில் கொரோனாவைரஸ் பரவல் படிப்படியாகக் கட்டுப்பாட்டுக்குள் வருவது நிம்மதியளித்தாலும் கூட, சென்னையில் இந்த பரவல் அதிகரித்து காணப்படுகிறது... நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 72 ஆகும். இவற்றில் சென்னையில் மட்டும் 52 தொற்றுகள் ஏற்பட்டன.. நெரிசல் மிகுந்த சென்னையில் இந்த வைரஸ் பரவலை தடுக்க புது யுக்திகளைதான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.. இதுகுறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கம் இதுதான்:

    எண்ணிக்கை

    எண்ணிக்கை

    "நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 72% சென்னையில் ஏற்பட்டவையாகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1,755 பேரில், 452 பேர் அதாவது 25.75% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 15- ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் புதிதாகப் பரவிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 513 ஆகும். அவற்றில் 238 தொற்றுகள், அதாவது 46.39% சென்னையில் நிகழ்ந்தவை.

    நோய்

    நோய்

    தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்ட நிலையில், சென்னையில் நோயைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். சென்னையில் மொத்தம் 140 பகுதிகள் தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

    பாதிப்பு

    பாதிப்பு

    புதிதாக ஏற்படும் தொற்றுகள் அதிகமாக இருக்கும் போதிலும், பாதிக்கப்பட்டோரில் பலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், புதிய தொற்றுகள் அனைத்தும் தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளுக்குள் தான் ஏற்படுகின்றன என்பது தான் சமூகப் பரவல் குறித்த அச்சத்தைப் போக்குகிறது. ஆனாலும் நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது.

    சென்னை மாநகரம்

    சென்னை மாநகரம்

    நோய் பாதித்த பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் மொத்தம் 420 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டும் 2 சதுர கிலோ மீட்டராக சுருக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கரோனா அறிகுறியுடன் காணப்படுபவர்களை உடனடியாகச் சோதித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம்தான் சென்னை மாநகரத்தை கரோனா வைரஸ் நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.

    மண்டலம்

    மண்டலம்

    சென்னையில் கரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் மட்டும் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்வது சாத்தியமில்லை; தேவையும் இல்லை. மாறாக, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ள சில லட்சக்கணக்கான மக்களைத் தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்குச் சோதனை செய்வது ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது ஆகும்.

    அடையாளம்

    அடையாளம்

    இந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும்.தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களில் வாய்ப்புள்ளோரை அவர்களின் வீடுகளிலும், மற்றவர்களைச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள கட்டிடங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும்.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவர்களை எங்கு, எப்போது, எத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் சென்னையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தப் பணிகள் முடிவடையும் வரை சென்னை மாநகர மக்கள் ஊரடங்கைத் தீவிரமாகக் கடைபிடித்து, நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் " என சுட்டிக்காட்டியுள்ளார்.

    English summary
    coronavirus: pmk mp anbumani ramadoss statement on coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X