சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லா மாவட்டத்திலும் 100ஐ தாண்டிய கேஸ்கள்.. 20 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியது.. ஷாக் ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கொரோனா தொற்று 100ஐ கடந்துள்ளது. இதேபோல் அண்மைக்காலமாக தினசரி எல்லா மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 20 மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் பல மாவட்டங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

9 மாவட்டங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 6 மாவட்டங்களில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான் கொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்

உயிரிழப்பு எங்கு அதிகம்

உயிரிழப்பு எங்கு அதிகம்

கொரோனா பரவல் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தேனி, விழுப்புரம், விருதுநகர், திருச்சி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் இதுவரை 1877 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்பும், பாதிப்பும் கடந்த சில நாட்களாக மிகவும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்,காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு ஒரே சீராக உள்ளது.

15 மாவட்டங்களில்

15 மாவட்டங்களில்

பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த 9 மாவட்டங்கள் விவரம்

  • சென்னை 77338
  • செங்கல்பட்டு 8120
  • காஞ்சிபுரம் 3606
  • மதுரை 6078
  • திருவள்ளூர் 6655
  • திருவண்ணாமலை 3076
  • தூத்துக்குடி 2261
  • வேலூர் 2772
  • விருதுநகர் 2073
20 மாவட்டங்கள்

20 மாவட்டங்கள்

தமிழகத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்த 20 மாவட்டங்கள்

  • சென்னை 77338
  • செங்கல்பட்டு 8120
  • காஞ்சிபுரம் 3606
  • மதுரை 6078
  • திருவள்ளூர் 6655
  • திருவண்ணாமலை 3076
  • தூத்துக்குடி 2261
  • வேலூர் 2772
  • விருதுநகர் 2073
  • கோவை 1261
  • கடலூர் 1526
  • கள்ளக்குறிச்சி 1791
  • கன்னியாகுமரி 1306
  • ராமநாதபுரம் 1849
  • ராணிப்பேட்டை1509
  • சேலம் 1867
  • தேனி 1729
  • திருநெல்வேலி 1758
  • திருச்சி 1504
  • விழுப்புரம் 1459
முககவசம் அணிதல்

முககவசம் அணிதல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்தம் உள்ள 37 மாவட்டத்திலும் 100ஐ கடந்துள்ளது. இனியும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வரே அறிவித்துள்ளார்.ஆகவே ஒவ்வொருவரும் அரசு சொல்வதை கேட்டு முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றி நடப்பது மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்கு உள்ள ஒரே வழி. அதேநேரம் ஒரு வேளை கொரோனா அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தால், அல்லது கொரோனா உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவனையை தொடர்பு கொள்ளுங்கள். ஏனெனில் ஆரம்ப நிலையில் சென்றால் எளிதாக குணமாக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

English summary
more than 20 districts rises 1000 more cases, Coronavirus positive cases detailed report of tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X