சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இதுக்குதான் படிச்சி படிச்சி சொன்னோம்.. இப்போ என்னாச்சு பாருங்க.." பெற்றோர் குமுறல் #IITMadras

Google Oneindia Tamil News

சென்னை: "இதற்காகத்தான் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என்று தலைபாடாக அடித்துக்கொண்டோம்.. இப்போது பாருங்கள் எப்படி ஆகிவிட்டது நிலவரம் " என்று புலம்புகிறார்கள் தமிழகத்தின் பெருவாரியான பெற்றோர்கள்.

சென்னை ஐஐடி வளாகத்தில் குபீரென கொரோனா வேகமாக பரவியது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

Recommended Video

    சென்னை: மாணவர்களுக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது ஐஐடி…!

    நேற்று ஒரே நாளில் 32 இரண்டு பேருக்கும், இன்று ஒரே நாளில் 33 பேருக்கு சென்னை ஐஐடி வளாகத்துக்குள் கொரோனா பரவியுள்ளது. ஆக மொத்தம் 104 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை ஐஐடியில் குபீரென கொரோனா பரவ காரணம் என்ன? பரபரப்பு பின்னணி.. உஷார் மக்களே சென்னை ஐஐடியில் குபீரென கொரோனா பரவ காரணம் என்ன? பரபரப்பு பின்னணி.. உஷார் மக்களே

    மெஸ்தான் காரணம்

    மெஸ்தான் காரணம்

    ஐஐடி வளாகத்தில், கொரோனா இவ்வளவு வேகமாகப் பரவுவதற்கான காரணம், அங்கே இருக்கக்கூடிய மெஸ்தான் என்று தெரியவந்துள்ளது. அத்தனை மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ரெஸ்டாரண்ட் தான் அங்கேயுள்ளது. ரெஸ்டாரண்ட் உள்ளே போகும்போது முககவசம் பயன்படுத்தமாட்டார்கள். மேலும் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மற்ற கல்லூரிகளுக்கு இது ஒரு பாடம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக வார்னிங் கொடுத்து உள்ளார்.

    தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு

    தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு

    டிசம்பர் 2ம் தேதி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் படிப்பு மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதை தொடர்ந்து டிசம்பர் 7ம் தேதி முதல், இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக அனுமதிக்கலாம். அதேநேரம் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது அரசு நிபந்தனை.

    ஒரே உணவகம்

    ஒரே உணவகம்

    ஆனால் இங்கும் சென்னை ஐஐடி விஷயத்தில் நடந்த தவறு நடைபெற வாய்ப்பு இருக்கிறது . ஏனெனில் கூட்டத்தை குறைப்பதற்காக 50% மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அரசு கூறி இருந்தாலும் கூட, பெரும்பாலான கல்லூரிகளில் ஒரே ஒரு உணவகம் தான் இருக்கும். எனவே மாணவர்கள் மொத்தமாக அந்த உணவகத்துக்கு செல்லும்போது நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை, சென்னை ஐஐடி நமக்கு தெளிவாக காட்டுகிறது.

    பள்ளிகள் திறப்பு வேண்டாம்

    பள்ளிகள் திறப்பு வேண்டாம்

    கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டது ஆனால் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வரும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்பதில் பெற்றோர்கள் உறுதியாக இருந்தனர். எனவேதான் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர் ஆன்லைன் மூலமாக கல்வியை சொல்லிக் கொடுத்தால் போதும். வகுப்பறைக்கு அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

    கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை அவசியம்

    கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை அவசியம்

    எனவே தான் தமிழக அரசு இந்த விஷயத்தில் பின்வாங்கியது. அதே நேரம், கொரோனா நோய் பாதிப்பு தமிழகம் முழுக்க குறைந்து வந்ததன் காரணமாகத்தான். கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை, திறப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு இருக்கக்கூடாது என்று சுகாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் மாணவர்கள்.. இளைஞர்கள். ஒருவேளை நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து இல்லாமல் குணமடைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வீட்டில் உள்ள அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்றோருக்கு இவர்கள் மூலமாக நோய் பரவல் ஏற்பட்டால் அவர்கள் நிலைமை என்ன ஆகும் என்பது சுகாதாரத் துறை வல்லுனர்களின் கேள்வியாக இருக்கிறது.

    English summary
    Coronavirus can be spread in colleges which are being opened from December 7th, Tamilnadu government should take all the precautionary actions after IIT Madras suffers with coronavirus spike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X