சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொஞ்சம் அதிகமாக நடந்தது.. அதற்கே இப்படியா.. தமிழகத்தில் ரெக்கார்ட் கொரோனா கேஸ் பதிவாக காரணம் இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை; தமிழகத்தில் நேற்றை விட இன்று கொஞ்சம் கூடுதலாக கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் கேஸ்களும் அதிகமாக வந்து இருக்கிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக்கு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது

21184 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 13980 பேர் சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா.. அதிர வைத்த ரெக்கார்ட்! இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா.. அதிர வைத்த ரெக்கார்ட்!

அதிக கேஸ்கள்

அதிக கேஸ்கள்

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் இன்று அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாக நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் முதல் காரணமாக இன்று தமிழகத்தில் அதிக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. தொடக்க காலத்தில் தமிழகத்தில் 13-14 வரை சோதனைகள் செய்யப்பட்டது. தமிழகத்தில் 75 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. இதனால் அதிக சோதனை நடந்தது.

குறைந்தது

குறைந்தது

ஆனால் கடந்த ஒரு வாரம் முழுக்க தமிழகத்தில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு சோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது 13 ஆயிரத்தில் இருந்து சோதனை 10 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. நேற்றும், நேற்று முதல் நாளும் தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் மட்டுமே சோதனை செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழகத்தில் தினமும் 800+ கேஸ்கள் வந்து கொண்டு தான் இருந்தது.

குறைந்தது சோதனை

குறைந்தது சோதனை

கொரோனா அறிகுறி இல்லை. கொரோனா சோதனை செய்வதற்கான வரையரைக்குள் வரவில்லை என்று குறைவான நபர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதேபோல் டார்கெட் டெஸ்டிங் செய்யப்பட்டது. அதாவது கொரோனா ஏற்பட அதிகம் வாய்ப்புள்ள நபர்களுக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டது . மற்றவர்களுக்கு பெரிய அளவில் தமிழகத்தில் சோதனை செய்யப்படவில்லை.

அதிக சோதனை

அதிக சோதனை

ஆனாலும் கேஸ்கள் ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று அதிகமாக கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12039 பேருக்கு இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 457233 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை இதுவரை செய்யப்பட்டுள்ளது.இதுதான் அதிகமான கேஸ்கள் இன்று வர காரணம் என்று கூறுகிறார்கள்.

ஷாக் செய்தி

ஷாக் செய்தி

நேற்றை விட இன்று கொஞ்சம் கூடுதலாக கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் கேஸ்களும் அதிகமாக வந்து இருக்கிறது. அதாவது 2000 பேருக்கு கூடுதலாக சோதனை செய்யப்பட்டது. இதற்கே தற்போது அதிக அளவில் கேஸ்கள் வந்துள்ளது. புதிய சோகமான ரெக்கார்டை தமிழகம் இதனால் படைத்துள்ளது. இன்னும் டெஸ்டிங் அதிகம் செய்தால், கேஸ்களும் அதிகம் ஆகும் என்கிறார்கள்.

English summary
Coronavirus: Reason for record cases in Tamilnadu today is high number of tests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X