சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருங்கி நின்று பேசினாலும்.. மூச்சு விட்டாலும் கூட கொரோனா பரவுமாம்.. அதிர வைக்கும் அமெரிக்க ஆய்வு

நெருக்கமாக நின்றால்கூட கொரோனா பரவும் என்ற புது தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நெருக்கமாக நின்று பேசினாலும், மூச்சுவிட்டாலும்கூட கொரோனாவைரஸ் தொற்று பரவுமாம்.. இப்படி ஒரு பகீர் ஆய்வுத் தகவல் இப்போது வெளியாகி உள்ளது!

Recommended Video

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர்

    மனித குலத்திற்கே ஆபத்தாக வந்திருக்கும் இந்த கொரோனாவைரஸ் பற்றி நித்தம் ஒரு தகவல், நித்தம் ஒரு அறிகுறி என்று தகவல்கள்தான் அதிகமாக வெளியாகின்றன. தீர்வுகள் தெளிவாக கிடைக்கவில்லை. இதனால்தான் உயர்ப்பலியையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதற்கான மருந்தை கண்டுபிடிக்க லட்சக்கணக்கான டாக்டர்கள் அல்லும் பகலும் போராடி வரும்நிலையில்தான், கொரோனாவைரஸ் பரவல் பற்றின ஆய்வுகளும் சூடுபிடித்தபடி உள்ளன. புதுப் புதுத் தகவல்களும் வெளியாகின்றன.

    எப்படி ஏற்பட்டது? சென்னை தனியார் மால் ஊழியருக்கு கொரோனா.. தீவிரமாக நடந்த விசாரணை.. துப்பு துலங்கியதுஎப்படி ஏற்பட்டது? சென்னை தனியார் மால் ஊழியருக்கு கொரோனா.. தீவிரமாக நடந்த விசாரணை.. துப்பு துலங்கியது

    வாசனை, ருசி

    வாசனை, ருசி

    இருமல், சளி, காய்ச்சல், என்ற அறிகுறிகள் முதலில் சொல்லப்பட்டது.. பிறகு வாசனையை நம்மால் நுகர முடியாமல் போனாலோ அல்லது நாக்கில் ருசி தெரியாமல் போய்விட்டாலோ அதுவும் கொரோனாவைரஸ் தொற்றுக்கான அறிகுறி என்றும் விஞ்ஞானிகள் சொன்னார்கள். எந்த அறிகுறியும் இல்லாமலும் கூட நோய்த் தொற்று வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    நோய் பரவல்

    நோய் பரவல்

    இப்போது இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ் பாதித்தவர் வேறு நபருடன் நெருக்கமாக அருகில் நின்று பேசினால்கூட நோய் பரவுமாம்.. அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் இதை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய அகாடமி ஆப் சயின்ஸ் நடத்திய இந்த ஆய்வில், நெருக்கமாக அருகில் நின்று மூச்சு விடுதல் மூலமும், பேசுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாய்ப்பு அதிகம்

    வாய்ப்பு அதிகம்

    அதாவது, தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் 20 - 30 வினாடிகளில் தரையை அடைந்து விடும்.. ஆனால், இதன் நுண் துளிகள் காற்றில் நீண்ட நேரம் இருக்கும்.... அதனால், அந்த இடத்தில் இருக்கும் பலருக்கும் இது பரவ வாய்ப்பும் அதிகம். இதுதொடர்பாக அகாடமியின் தலைவர் டாக்டர் ஹார்வி பைன்பெர்க், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வெளிப்படுத்தி உள்ளார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் மாஸ்க்குகளை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்துவது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருகிறது. கைகுலுக்கி கொள்வதும், கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவதும், வெளிநாட்டுக்காரர்களின் இயல்பான பழக்கவழக்கம்.. அதனால் இப்போதைய இந்த ஆய்வின் தகவல் உலக மக்களுக்கே ஒரு அதிர்ச்சிதான்!

    English summary
    coronavirus: reports say that, corona may by breathing also
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X