சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் 144.. ஒரு வார காலத்திற்கு.. மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச மாற்றம் வருமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களின் வாழ்க்கையில் தற்போதைய ஒருவார கால 144 தடை உத்தரவு வாழ்க்கை முறை சற்றேனும் மாற்றங்களைத் தருமா? என்பது சமூகவியலாளர்களின் எதிர்பார்ப்பு.

144 தடை உத்தரவு.. பொதுவான பதற்றமான இடங்களில், வன்முறை நிகழ்ந்த இடங்களில் அரிதினும் அரிதாக பிறப்பிக்கப்படுகிற ஒரு நடைமுறை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்த 144 தடை உத்தரவு என்ன ? இந்த 144 தடை உத்தரவு என்பதை எப்படி கடைபிடிக்க வேண்டும்? என்பது தெரியாது. ஏனெனில் நமக்கும் 144 தடை உத்தரவுகள் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருந்து கொண்டு இருக்கிறது.

இது ஒருவகையில் தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்கியமான அனைத்து துறைசார்ந்த முன்னேற்றத்தின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியான தமிழகத்தில்தான் தற்போது 144 தடை உத்தரவு வாழ்க்கை ஒரு வார காலத்துக்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள்- விஜயபாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள்- விஜயபாஸ்கர்

அவசியம் சமூக இடைவெளிகள்

அவசியம் சமூக இடைவெளிகள்

கொரோனா எனும் ஆட்கொல்லி நோயின் பிடியில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளிகளை ஏற்படுத்துதலும் மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கை என்பது உலகம் கடைபிடிக்கிற ஒரு நடைமுறை. ஆகையால் இந்தியாவிலும் அத்தகைய ஒரு தடுப்பு நடவடிக்கை தேவை என்பதால் பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு வாழ்க்கையை நாம் ஒருநாள் வாழ்ந்தோம்.

தமிழகத்தில் அச்சமூட்டும் கொரோனா

தமிழகத்தில் அச்சமூட்டும் கொரோனா

ஆனாலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிக வேகமாக பரவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இதன் போக்கு பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. ஆகையால் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு. இன்று மாலை முதல் இந்த 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. இதற்காக அத்தனை முன்னேற்பாடுகளையும் தமிழகம் செய்து கொண்டிருக்கிறது.

மக்களுக்கான பாடம்

மக்களுக்கான பாடம்

பொதுவாக 144, ஊரடங்கு உத்தரவு போன்ற வார்த்தைகள் எல்லாம் எங்கோ காஷ்மீரிலோ பஞ்சாபிலோ பிறப்பிக்கப்படுவது.. நமக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை என்பது சமூகத்தின் பொதுப்புத்தி. ஆனால் தற்போது கொரோனாவின் புண்ணியத்தால் அந்த 144 தடை, ஊரடங்கு உத்தரவு வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் ஒட்டுமொத்த தேசமும் பாடம் கற்கும் தருணமாக இது அமைந்திருக்கிறது. இத்தகைய தடை வாழ்க்கை மூலம் நம்மால் இந்த சமூகத்துக்கு ஒரு தொற்று நோய் பரவவிடக் கூடாது; நம்மால் பிறருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்கிற குறைந்தபட்சமான பொது சிந்தனை ஒன்று விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய பொதுசிந்தனைக்கான விதையை கொரோனாவின் 144 தடை ஆழமாகவே விதைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

வலி, வேதனையை புரிந்து கொள்வோம்

வலி, வேதனையை புரிந்து கொள்வோம்

இதேபோல் எதற்காகவோ யாரோ ஒரு குரூப் போராடுவார்கள்? அவர்களை ஒடுக்கவே போடுகிறார்கள் 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு! என்கிற விட்டேத்தியான மனோபாவங்களுக்கும் தற்போதைய 144 தடை வாழ்க்கை விடை சொல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 144 தடை வாழ்க்கையை வாழுகிற போது அதுவும் குறைந்தபட்சமாக பொருட்கள் எல்லாம் கிடைக்கிற இந்த தளர்த்தப்பட்ட 144 தடை உத்தரவு வாழ்க்கையை அனுபவிக்கும் போதுதான் பல மாதங்களாக 144 தடை உத்தரவோடும் ஊரடங்கோடும் வாழுகிற மக்களின் வலியும் வேதனையும் புரியும். இத்தனை வலிகளோடு அப்படி எதற்காக போராடுகிறார்கள்? என்னதான் கோரிக்கை வைக்கிறார்கள்? என நம் காதுகளை கொஞ்சமேனும் திறந்து வைக்கவும் 144 தடை வாழ்க்கை உதவும் என்பதும் சமூகவியலாளர்களின் அக்கறை.

English summary
Social Activists belevie that Sec.144 imposing will teach some lessons to the Public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X