சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உண்மை தெரிய வேண்டும்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை.. மறுத்த முதல்வர்.. டிவிட்டரில் நடந்த வார்த்தை போர்!

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்ட அழைப்பை முதல்வர் பழனிசாமி நிராகரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்ட அழைப்பை முதல்வர் பழனிசாமி நிராகரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா தமிழகத்தில் வேகம் எடுத்துள்ளது. மொத்தம் தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

இதில் சென்னையில் அதிகமாக 24 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு அடுத்து ஈரோட்டில் அதிகமாக 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா காரணமாக அதிமுக, திமுக சண்டை வலுத்துள்ளது.

கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக பயன்படுத்துக... பெருந்தன்மையுடன் ஸ்டாலின் ஒப்புதல் கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக பயன்படுத்துக... பெருந்தன்மையுடன் ஸ்டாலின் ஒப்புதல்

ஸ்டாலின் அழைப்பு

ஸ்டாலின் அழைப்பு

இரண்டு நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின், அரசை அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்து இருந்தார். அதில் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சந்திக்க, ஆளுங்கட்சி - எதிர்கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும். இப்பேரிடரை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சினை இருக்குமெனில், "வீடியோ கான்பரன்ஸ்" மூலம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யலாம்.

நம்பிக்கை ஏற்படும்

தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவும், அச்சம் நீங்கவும் நாம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து செயலாற்ற வேண்டும். இதை நீங்கள் மட்டும் தனித்து நின்று துடைத்திட முடியாது. ஆளும் கட்சி மற்றும் தனித்து நின்று துடைத்திட முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக நின்று செயல்பட வேண்டிய நேரம் இது .மாநிலம் முழுக்க உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும், என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

அச்சம் நீங்கும்

அச்சம் நீங்கும்

இந்த அறிக்கையை டிவிட்டரில் வெளியிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை அதிலும் டேக்கும் செய்து இருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

மருத்துவ பிரச்சனை

இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை, என்று மிகவும் காட்டமாக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். திமுக விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தை மிகவும் கோபமாக முதல்வர் பழனிசாமி மறுத்து உள்ளார். இதனால் டிவிட்டரில் திமுக, அதிமுகவினர் இடையே கடுமையான சண்டை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் கொடுத்த பதிலடி

இதற்கு மீண்டும் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார், அதில் அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். முதல்வர் பழனிசாமி அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம், என்று குறிப்பிட்டு இருந்தார்

டிரம்ப் கூட பேசினார்

டிரம்ப் கூட பேசினார்

கொரோனாவிற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட தன்னோடு சண்டையில் இருந்த சீனாவுடன் நட்பாக சென்றுள்ளார். அதேபோல் கேரளாவில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இரண்டும் ஒன்றாக சேர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. மகாஷ்டிராவில் மூன்று மாநில கட்சிகள் ஒன்றாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதிமுக கட்சி பாமக போன்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகளை கூட பெரிதாக காது கொடுத்து வாங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus sparks new fight between DMK and AIADMK in Social media today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X