சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலைமை மோசம்.. சென்னையில் லாக்டவுனை தீவிரமாக்குங்கள்.. முதல்வருக்கு மருத்துவ குழு அதிரடி பரிந்துரை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும் என்று மருத்துவர் குழு தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அறிவுரை வழங்கி உள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    தமிழக மருத்துவ நிபுணர் குழுவுக்கு முதல்வர் அழைப்பு.. என்னவாக இருக்கும்?

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று தமிழகத்தில் மேலும் 1,974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை செய்தார். ஜூன் 17-ம் தேதி பிரதமருடன் முதல்வர் ஆலோசனை செய்ய உள்ள நிலையில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.

    மருந்தே இல்லையே.. கொரோனா பாதித்தவர்களுக்கு அப்படி என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது? முழு விளக்கம்மருந்தே இல்லையே.. கொரோனா பாதித்தவர்களுக்கு அப்படி என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது? முழு விளக்கம்

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பின் வரும் மூன்று முக்கியமான விஷயங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார். அதன்படி தமிழகத்தில் கொரோனா பரவலை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது. சென்னையில் எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று ஆலோசனை செய்தார். இரண்டாவதாக சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் கொண்டு வர வேண்டுமா, லாக்டவுன் மட்டும்தான் தீர்வா என்று ஆலோசனை செய்தார்.

    பேட்டி

    பேட்டி

    மூன்றாவதாக தமிழகத்தில் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்றும் இன்று ஆலோசனை செய்து வந்தனர். முடிவாக மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்தது. அவர்கள் அளித்த பேட்டியில், சென்னையில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    அறிவுரை வழங்கினார்கள்

    அறிவுரை வழங்கினார்கள்

    சென்னையில் கொரோனா லாக்டவுன் தளர்வுகளை நீக்க வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அரசு இதில் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே சமயம் மாஸ்க், தனிமனித இடைவெளி விடுதல் மிக அவசியம். மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் தயாராக இருக்கிறது.எதையும் எதிர்கொள்ளும் வலிமையுடன்தான் நாங்கள் இருக்கிறோம்.

    தயார்

    தயார்

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து மொத்தமாக 75,000 படுக்கைகள் தயாராக இருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா முதல் அலைதான் வீசுகிறது. இது முதல் அலைதான். சீனாவை போல 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் 2வது அலை ஏற்படலாம். இந்த 2வது அலை வீரியமாக இருக்கும். நாம் இதற்கு தயாராக இருக்க வேண்டும், என்று மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

    English summary
    Coronavirus: Tamilnadu CM Edappadi Palanisamy to meet medical experts today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X