சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு சதவீதம் குறைவு.. முதல்வர் பழனிசாமி அதிரடி கடிதம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே தமிழகத்தில் தான் கொரோனா உயிரிழப்பு சதவீதம் குறைவாக உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தினமும் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1458 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 30152 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20955 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்..

கலவரத்திற்கு காரணம்.. கபில் மிஸ்ராவின் பேச்சை குறிப்பிட்ட மார்க் சூக்கர்பெர்க்.. வெடித்தது சர்ச்சை!கலவரத்திற்கு காரணம்.. கபில் மிஸ்ராவின் பேச்சை குறிப்பிட்ட மார்க் சூக்கர்பெர்க்.. வெடித்தது சர்ச்சை!

என்ன கடிதம்

என்ன கடிதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில், கடந்த இரண்டு மாதங்களாக காற்றாற்று வெள்ளத்தை கடப்பது போல மிக இக்கட்டான பிரச்சனையை மக்களின் ஆதரவுடன் நாம் கடந்து வந்து இருக்கிறோம். உங்களின் ஆதரவுதான் இதற்கு காரணம். கொரோனா சமூக தொற்று ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு என்று இதனால்தான் அரசு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது . கடுமையான விதிகள் இதனால்தான் போடப்பட்டது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த கொரோனாவை எதிர்க்க உலக நாடுகளே திணறி வருகிறது. அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகள் கூட இதனால் மோசமாக திணறி உள்ளது. ஆனால் நாம் கொரோனா பரவலை தீவிரமாக எதிர்கொண்டு இருக்கிறோம்.அரசின் தீவிர முயற்சியால் நாட்டிலேயே குணமடைவோர் சதவீதம் தமிழகத்தில் தான் அதிகம். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம்.

தமிழ்நாடு நிலைமை

தமிழ்நாடு நிலைமை

தினமும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு சதவீதம் குறைவாக உள்ளது. மிக சிறப்பான மருத்துவ சோதனைகள் மற்றும் சிகிச்சை மூலம் நாம் இதை சாதித்து இருக்கிறோம். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக சோதனை மையங்கள் உள்ளன.

அதிக சோதனை

அதிக சோதனை

நாம் நாளுக்கு நாள் சோதனையை அதிகரிக்கிறோம். இதனால் கொரோனா விரைவில் கட்டுப்படுத்தப்படும். தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Recommended Video

    TNEB கொள்ளை அடிக்கிறதா ? - நடிகர் பிரசன்னா குமுறல்
    கவசம் அவசியம்

    கவசம் அவசியம்

    மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. மக்கள் அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Coronavirus: Tamilnadu has less death rate says TN CM Palanisamy in his letter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X