சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத அளவிற்கு கேஸ்கள்.. ஒரே நாளில் தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா.. 17000 ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் எப்படி இத்தனை கேஸ்கள் வந்தது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இதுவரை 600-700 கேஸ்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மொத்தமாக 805 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 17000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 17082ஐ ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்துக்கே அஞ்சாத ஜெசிந்தா எங்கே.. டம்முன்னு கேட்ட சத்தத்துக்கு ஆடிப் போன டிரம்ப் எங்கே!நிலநடுக்கத்துக்கே அஞ்சாத ஜெசிந்தா எங்கே.. டம்முன்னு கேட்ட சத்தத்துக்கு ஆடிப் போன டிரம்ப் எங்கே!

சென்னை நிலை

சென்னை நிலை

சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்றுதான் பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.

அதிகமான எண்ணிக்கைக்கு

அதிகமான எண்ணிக்கைக்கு

மே 11 ஆம் தேதி 798 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதே அதிகபட்சமான எண்ணிக்கையாக இருந்தது. இன்று அதைவிட அதிக தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று கொரோனா ஏற்பட்டவர்களில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். வெளியூர், மாநிலத்திலிருந்து வந்த 93 பேர் சேர்த்து இன்று இத்தனை பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் எத்தனை

டிஸ்சார்ஜ் எத்தனை

தமிழகத்தில் இதுவரை 8,731 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மொத்தம் தமிழகத்தில் 407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் 11835 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 4250480 கொரோனா சோதனைகள் இதுவரை தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது.

சோதனை மையம் எத்தனை

சோதனை மையம் எத்தனை

தமிழகத்தில் மொத்தம் 65 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. இன்று அரசு மருத்துவமனையில் மட்டும் 5 பேர் பலியாகி உள்ளனர். தனியார் மருத்துவமனையில் 2 பேர் பலியாகி உள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் வேகமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

English summary
Coronavirus: Tamilnadu sees a surge of cases in single, crosses 17 thousand mark today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X