சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தைரியம் இருந்தா நேரில் வாங்க.. ரசிகர்களுக்கு பாடம் கற்பியுங்கள் ரஜினி.. தமிழ்நாடு வெதர்மேன் பொளேர்

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் தன்னை இழிவாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் டிவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் தன்னை இழிவாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் டிவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக இந்தியா முழுக்க இன்று மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் இந்த மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

12 மணி நேரத்தில் கொரோனா செத்துவிடும். அதனால் மக்கள் வீட்டில் இருந்து ஜனதா ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசி இருந்தார். ஆனால் அவர் பேசிய விஷயம் வதந்தி, 12 மணி நேரத்தில் வைரஸ் சாகாது என்று கூறி, டிவிட்டர் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது.

வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் இந்த வீடியோ நேற்று வெளியானதும், அந்த வீடியோவுக்கு கீழ் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பதில் அளித்து இருந்தார். அதில் ரஜினிகாந்த் நல்ல எண்ணத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கலாம். ஆனால் இது பொய்யான செய்தி, இது காட்டு தீ போல பரவி வருகிறது என்பதை உணர வேண்டும். இந்த கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் சாகும் என்பதை நம்ப வேண்டாம். எந்த ஆராய்ச்சியும் இந்த வதந்தியை உறுதி செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

சில நிமிடம்

இதையடுத்து சில நிமிடத்தில் ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த வீடியோ டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் டிவிட் செய்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், ரஜினியின் டிவிட்டை டிவிட்டர் நிறுவனம் மிக வேகமாக நீக்கிவிட்டது. சமூக வலைதள நிறுவனங்கள் தவறான பொய்யான செய்திகளுக்கு எதிராக வேகமாக செயல்படுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. டிவிட்டருக்கு சல்யூட். மோசமான நேரங்களில், முக்கியமான நபர்கள் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.

சண்டை

சண்டை

இதையடுத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் வெதர்மேன் பிரதீப்பை கடுமையாக கண்டிக்க தொடங்கினார்கள். அவரின் டிவிட்டர் பக்கத்தில் மோசமான வார்த்தைகளில் அவரை திட்டினார்கள். இன்னும் சில ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒரு படி மேலே போய், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறித்து மத ரீதியான தாக்குதல்களை நடத்தினார்கள். டிவிட்டர் முழுக்க இதனால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

என்ன பதில் அளித்தார்

இதற்கு தற்போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பதில் அளித்துள்ளார். அதில், ஒரு தவறான போஸ்டை தவறான செய்தி என்று கூறியதற்காக என்னை பலர் இழிவான வகையில் மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். அதேபோல் என்னை திமுக ஆள் என்று கூறுகிறார்கள். என் மதம் குறித்து பேசுகிறார்கள். சில ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இழிவாக பேச மட்டும்தான் தெரியும் போல. விமர்சனங்களை எப்படி தாங்கிக்கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் இவர்களுக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும் .

அதிக தீமைகள்

ரஜினிக்கு அதிக நன்மைகளை விட தீமைகளைத்தான் இது போன்ற ரசிகர்கள் செய்வார்கள். ஸ்டாலின், முதல்வர், அல்லது பிரதமர் என்று யார் தவறு செய்தாலும் அதை நான் சுட்டிக் காட்டுவேன். ஒரு தவறை தவறு என்று சுட்டிகாட்டுவது தவறு இல்லை. என்னை இழிவு செய்ய நினைப்பது வேலைக்கு ஆகாது. உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் நீங்கள் நேருக்கு நேர் வந்து பேசுங்கள், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Coronavirus: TamilNadu Weatherman condemns abuse from Rajinikanth fans for his post against the actor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X