சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது கொஞ்சம் சிக்கலானது.. தமிழகத்திற்கு காத்திருக்கும் புதிய சவால்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு புதிய சவால் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 17000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 17082ஐ ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது.

Tamil Nadu Weather: வெயிலூராக மாறிய வேலூர்.. தாளித்த தருமபுரி.. தமிழகத்தின் இன்றைய வெயில் நிலவரம்Tamil Nadu Weather: வெயிலூராக மாறிய வேலூர்.. தாளித்த தருமபுரி.. தமிழகத்தின் இன்றைய வெயில் நிலவரம்

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

தமிழகத்தில் ஒரே நாளில் எப்படி இத்தனை கேஸ்கள் வந்தது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் மூலம்தான் இப்போது கேஸ்கள் அதிகம் வருகிறது. இவர்கள் எல்லாம் தமிழகத்தில் எல்லையிலேயே சோதனை செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறார்கள். முக்கியமாக வெளி மாநிலங்களில் இருந்து பலர் வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக இது அதிகம் உள்ளது.

வெளிமாநிலம் நிலை

வெளிமாநிலம் நிலை

இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 93 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு விமானம், தற்போதைய விமான சேவை மூலம் பலர் தமிழகம் வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 942 பேர் இப்படி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து 726 பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்களை எல்லையிலேயே நாங்கள் ஸ்கிரீனிங் செய்கிறோம்.

அறிகுறி உள்ளவர்கள்

அறிகுறி உள்ளவர்கள்

இவர்கள் தமிழகம் வந்த பின் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அறிகுறி உள்ளவர்கள் சோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரும் தமிழர்கள். தங்கள் குடும்பத்தை பார்க்க இவர்கள் தமிழகம் வருகிறார்கள். இவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் மூலம் தமிழகத்திற்கு உள்ளே கொரோனா ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம்.

என்ன சவால்

என்ன சவால்

இது கொஞ்சம் சவாலான விஷயம். இதனால் தமிழகத்தில் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் இன்னொரு சவாலான விஷயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தற்போது தினமும் 25 விமானங்கள் வருகிறது. இதன் மூலம் கொரோனா கேஸ்கள் வர வாய்ப்புள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வராமல், கொஞ்சம் கொஞ்சமாக வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா?
    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    இப்படி தமிழகம் வரும் நபர்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறோம். விமான நிலையத்தில் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் மூலம் பிறருக்கு கொரோனா பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கண்டிப்பாக கொரோனா பரவலை தடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus: Tamilnadu will face new challenges says Minister Vijayabaskar in today press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X