சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்பார்த்ததை விட அதிகம்.. புதிய ரெக்கார்ட் படைத்த டாஸ்மாக் வசூல்.. முதல் நாளே பல கோடி வருமானம்!

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் டாஸ்மாக் வருமானம் 170 கோடி ரூபாய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாள் டாஸ்மாக் வருமானம் 170 கோடி ரூபாய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்ததை விட இது அதிக வருமானம் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    முதல் 2 TASMAC Token-களை தட்டிச்சென்ற 2 Spain குடிமகன்கள்

    தமிழகத்தில் நேற்று அனைத்து மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதால் நாடு முழுக்க மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதே சமயம் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பண்டிகை நாள் வசூலை தாண்டும்.. ரெக்கார்ட் வைக்க போகுது.. பெரிய வருமானத்தை எதிர்நோக்கும் டாஸ்மாக்! பண்டிகை நாள் வசூலை தாண்டும்.. ரெக்கார்ட் வைக்க போகுது.. பெரிய வருமானத்தை எதிர்நோக்கும் டாஸ்மாக்!

    வருமானம் எவ்வளவு

    வருமானம் எவ்வளவு

    தமிழகத்தில் நேற்று ஒரு நாள் டாஸ்மாக் வருமானம் 170 கோடி ரூபாய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்ததை விட இது அதிக வருமானம் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 5146 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் இருந்து தினமும் சராசரியாக 80 கோடி ரூபாய் வசூல் ஆகும் . இதுதான் சராசரியாக தமிழகத்தில் நடக்கும் டாஸ்மாக் வசூல் ஆகும்.

    எத்தனை கடைகள்

    எத்தனை கடைகள்

    ஆனால் நேற்று தமிழகம் முழுக்க எல்லா கடைகளும் திறக்கப்படவில்லை. மாறாக வெறும் 3750 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. கண்டெயின்மெண்ட் சோன் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. சில கிராமங்களில் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

    அதிக வசூல்

    அதிக வசூல்

    ஆனால் இப்படி குறைவாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு கூட நேற்று 170 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வசூல் விவரம் இன்று காலை வெளியாகும். இதன் அளவு 170 கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கும் என்கிறார்கள். தமிழகத்தில் இது புது ரெக்கார்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை அல்லாத ஒரு நாளில் இவ்வளவு பெரிய வசூல் வருவது இதுவே முதல்முறையாகும்.

    பண்டிகை நாள்

    பண்டிகை நாள்

    தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களில் அதிகமாக மது விற்பது வழக்கம். காலையில் இருந்து மாலை வரை தமிழகத்தில் மது விற்பனை மாஸாக நடக்கும். கடந்த டிசம்பர் 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 320 கோடி ரூபாய் வரை வருமானம் வந்தது. கடந்த வருடம் 250 கோடி ரூபாய் வரை வருமானம் வந்தது. இப்படி வருடா வருடம் வருமானம் அதிகமாகிக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 200 கோடி ரூபாய் வரை வருமானம் வந்துள்ளது.

    English summary
    Coronavirus: The first-day collection details of Tasmac in Tamilnadu yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X