சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே சோர்ஸ்.. இதுவரை இப்படிதான் டெஸ்ட் செய்கிறோம்.. கொரோனா குறித்து முதல்முறை விளக்கிய பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கொரோனா சோதனைகள் எப்படி நடக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனைகள் எப்படி நடக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    How technology helps Tamilnadu in Contact tracing method so far?

    தமிழகத்தில் நேற்று காலை சென்னையில் பலியான நபரோடு சேர்த்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் 19,851 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிரான தமிழக அரசின் செயல்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.
    சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனைகள் எப்படி நடக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.

    தமிழகத்தில் நேற்று காலை சென்னையில் பலியான நபரோடு சேர்த்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் 19,851 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிரான தமிழக அரசின் செயல்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.

    டெல்லி மாநாடு

    டெல்லி மாநாடு

    தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்கள் டெல்லியில் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்ட நபர்கள். இதில் 1475 பேர் வரை தாமாக முன் வந்து தமிழக அரசிடம் தெரிவித்தனர். இதன் மூலம் இவர்களில் 573 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீதம் உள்ளவர்களில் 855 பேருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மீதம் இருப்பவர்கள் 44 பேருக்கு சோதனை முடிவுகள் வரவில்லை.

    ஒரே சோர்ஸ் எப்படி

    ஒரே சோர்ஸ் எப்படி

    அவர்களை தொடர்பு கொண்ட 250 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மத மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார்கள். தேவையில்லாத சர்ச்சையை தவிர்க்கும் வகையில் தற்போது ஒரே சோர்ஸ் என்ற வார்த்தையை தமிழக அரசு பயன்படுத்துகிறது. இந்தியாவில் டெல்லி மாநாடு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒரே சோர்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தும் ஒரே மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

    பேட்டி கொடுத்தார்

    பேட்டி கொடுத்தார்

    இந்த நிலையில் பீலா ராஜேஷ் பேட்டியில் , தமிழகத்தில் கொரோனா டெஸ்டிங் சரியாக செய்யப்பட்டு வருகிறது. பலருக்கு அறிகுறி இல்லை. ஆனால் இரண்டு மணி நேரத்தில் நிலை மாறுகிறது. அறிகுறி இல்லாமல் பலர் பலியாகிறார்கள். அதனால் நீங்கள் எங்கள் நிலையை புரிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுக்க இந்த பிரச்சனை உள்ளது. மருத்துவர்கள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். நாங்கள் வைரஸின் ஆர்என்ஏவை சோதனை செய்கிறோம்.

    டெஸ்ட் எப்படி நடக்கிறது

    டெஸ்ட் எப்படி நடக்கிறது

    ஆர்என்ஏ சோதனை செய்வதன் மூலம்தான் கொரோனாவை கண்டுபிடிக்கிறோம். இந்த டெஸ்ட் முறையைத்தான் கடைபிடிக்கிறோம். இன்று உங்களுக்கு டெஸ்ட் செய்தால் நெகடிவ் என்று வரலாம். ஆனால் 28 நாட்களுக்குள் உங்களுக்கு கொரோனா வரலாம். ஒருமுறை நெகடிவ் வந்தால் தொடர்ந்து நெகட்டிவ் வரும் என்று கூற முடியாது. மறுபடியும் சொல்கிறேன். நாங்கள் அதிகமாக டெஸ்ட் செய்கிறோம். போதுமான சோதனை சாலைகள் தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கிறது.

    அதிக டெஸ்டிங் சாதனங்கள்

    அதிக டெஸ்டிங் சாதனங்கள்

    டெஸ்டிங் சாதனங்கள் ஆர்டர் செய்துள்ளோம். எல்லா அரசு மருத்துவ கல்லூரியிலும் சோதனை செய்யும் அளவிற்கு தயார் செய்து வருகிறோம். எங்களின் சோதனை சாலைகளை இன்னும் அதிகரிக்க முயன்று வருகிறோம் . இதற்காக 12 குழுக்களை அமைத்து இருக்கிறோம். சோதனை சாலைகளை எங்கு எல்லாம் அமைக்கலாம் என்பது குறித்து ஆராய்ச்சி செய்யவே தனியாக குழு அமைத்து உள்ளோம், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: This is how we test the outbreak, Beela Rajesh reveals details on RNA test of COVIDd -19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X