சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா கிளஸ்டர்.. சென்னையில் உள்ள அந்த 34 இடங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் டீம் போடும் "மைக்ரோ பிளான்"

தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக புதிய மைக்ரோ பிளான் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக புதிய மைக்ரோ பிளான் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதிக கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கொரோனாவை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள்... நெஞ்சை விட்டு அகலவில்லை -கனிமொழிதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள்... நெஞ்சை விட்டு அகலவில்லை -கனிமொழி

சென்னை நிலை

சென்னை நிலை

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக புதிய மைக்ரோ பிளான் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதிக கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கொரோனாவை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 34 இடங்கள் இதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

புதிய பிளான்

புதிய பிளான்

மொத்தம் மூன்று சோன்கள்தான் சென்னையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் , திருவிக நகர் ஆகிய பகுதிகள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 34 இடங்களில் 30 இடங்கள் இந்த பகுதிக்கு கீழ்தான் வருகிறது. இந்த நிலையில் தற்போது இங்கு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய நம்ம சென்னை கோவிட் விரட்டும் என்று இந்த மைக்ரோ பிளானிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எத்தனை குழுக்கள்

எத்தனை குழுக்கள்

இந்த திட்டத்தின்படி இந்த 34 இடங்களில் மொத்தம் 500 பேர் கொண்ட குழுக்கள் களமிறக்கப்படும். இவர்கள் வீடு வீடாக சென்று சோதனைகளில் ஈடுபடுவார்கள். இந்த 34 பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் ஒன்று விடாமல் சோதனை செய்யப்படும். இதில் 100 மருத்துவர்கள் வரை இருப்பார்கள். 120 சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். வயதானவர்களுக்கு சோதனை செய்ய அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மொபைல் டெஸ்டிங் எப்படி

மொபைல் டெஸ்டிங் எப்படி

அதே சமயம் இதற்காக மொபைல் டெஸ்டிங் குழுக்கள் அமைக்கப்படும். 34 இடங்களிலும் மினி கொரோனா கேம்ப்கள் அமைக்கப்படும். இந்த கேம்ப்கள் மூலம் அந்த பகுதிகளில் எல்லோருக்கும் கொரோனா சோதனைகள் செய்யப்படும். இதன் மூலம் கொரோனா பரவலை கண்டுகொள்ள முடியும், என்று கூறப்பட்டுள்ளது. இன்றில் இருந்து இந்த குழு தங்கள் பணிகளை தொடங்கும், என்றும் கூறப்பட்டுள்ளது.

English summary
Coronavirus: Tamilnadu creates new micro plan against containment of cases in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X