• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செம கோ ஆர்டினேஷன்.. இறுக்கி பிடிச்சு நடக்கும் வேலைகள்.. அட்டகாசமான அதிகாரிகள் கையில் தமிழகம்.. சபாஷ்

|

சென்னை: சென்னை: பெரிய அளவுக்கு இப்போதைக்கு நம்மிடம் எந்தவித மருத்து டெஸ்ட் கிட்-களும் இல்லைதான்.. ஆனால் சமாளிக்கக் கூடிய அளவில் இருக்கு.. அதேசமயம், அரசுத்துறையின் "கோ ஆர்டினேஷன்" சிறப்பாக இருக்கிறது.. அருமையாக செயல்பட்டு வருவதை பாராட்டியே ஆக வேண்டும்.. அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், ஊழியர்கள் வரை போற்றப்பட வேண்டியவர்களே!

  மீண்டும் வந்த விஜயபாஸ்கர்... இதான் காரணமா?

  நேற்று முன்தினம் பீலா ராஜேஷ் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "அரசுத்துறையின் கண்காணிப்பு மிகச் சரியாக போய்க் கொண்டுள்ளது... அதனால்தான் எந்த தவறும் வராமல் சரியான கோணத்தில் நமது பணிகள் நடைபெறுகின்றன" என்று ஒரு வார்த்தை சொன்னார்.

  இது முற்றிலும் உண்மையே.. முதல்வர், சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை செயலாளர் இவர்களின் பணியை தினமும் நாம் நேரடியாக கண்டு வருகிறோம்.. மீடியாக்கள் மூலமாகவும் இவர்களது ட்விட்டர்வாயிலாகவும் நிறைய தகவல்களை காண முடிகிறது.. இதை தவிர கொரோனா அப்டேட்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

  அருமை

  அருமை

  அதேசமயம், இவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே அருமையாக வேலை பார்த்து வருகிறது.. முக்கியமாக கலெக்டர்கள்.. இவர்களை எவ்வளவு, எப்படி பாராட்டினாலும் தகும்... எந்நேரமும் விழிப்பாக இருக்கிறார்கள்... கிட்டத்தட்ட எல்லா மாவட்ட கலெக்டர்களுமே பம்பரம் போல சுழன்று பணியாற்றுகின்றனர்.

  கலெக்டர்கள்

  கலெக்டர்கள்

  திருவண்ணாமலை கந்தசாமி, திருப்பூர் டாக்டர் விஜய கார்த்திகேயன், நீலகிரியில் இன்னசென்ட் திவ்யா என அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ராத்திரி பகலாக பணியாற்றுகின்றனர்... இத்தனைக்கும் நம்மிடம் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை.. அதற்கான கிட்-களும் இல்லை.. இனிமேல்தான் தருவித்து தரவேண்டி இருக்கிறது.. அதனால் என்ன வசதி கையில் இருக்கிறதோ, அதை வைத்து திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

  சிறப்பு வார்டுகள்

  சிறப்பு வார்டுகள்

  அதேபோல அதிகாரிகள் முதல் கடைநிலை அரசு பணியாளர் வரை தங்கள் குடும்பம், குட்டிகளை மறந்து கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. மிக குறுகிய காலத்தியே கொரோனா சிறப்பு வார்டுகளை ரெடி செய்து, தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களை அதில் தனிமைப்படுத்தி டெஸ்ட் எடுக்கும் வேலைகள் நடக்கின்றன.. மற்றொரு புறம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் பணியையும் விடாமல் கவனிக்கின்றனர்.

  ஒத்துழைப்பு

  ஒத்துழைப்பு

  இவர்களை விட தூய்மைப் பணியாளர்களுக்கு நாம் கோவில் கட்டி கும்பிட வேண்டும். என்ன ஒரு அர்ப்பணிப்பான பணி.. இரவு பகலாக இவர்கள் மக்களுக்காக உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்து கொண்டுள்ளனர். அதேபோலத்தான் காவல்துறையினரும்.. அவர்களின் அர்ப்பணிப்புக்கு நாம் அமைதியாக ஒத்துழைப்பு கொடுப்பதுதான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும். அதைத் தவிர அவர்களும் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

  விஜயபாஸ்கர்

  விஜயபாஸ்கர்

  இது எல்லாவற்றையும்விட முதல்வரும் சரி, அமைச்சர் விஜயபாஸ்கரும் சரி, கலெக்டர்களும் சரி.. எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும் பீதியை ஏற்படுத்தாத வண்ணம் கொரோனா பாதிப்பு தகவல்களை தெரிவிக்கிறார்கள்.. இது பாராட்டுக்குரியது. இப்போதைக்கு இனம்புரியாத குழப்பம், பீதியில் உள்ள தமிழக மக்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கைதான் முதலில் தேவைப்படுகிறது.

  வெளிப்படைத்தன்மை

  வெளிப்படைத்தன்மை

  அதே சமயம் வெளிப்படைத்தன்மையும் இவர்களிடம் உள்ளது.. ஒருசிலர் கொரோனா சம்பந்தமான தகவல்கள் மறைக்கப்படுகின்றன, பூசி மெழுகுகிறார்கள் என்றெல்லாம்கூட ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டினார்கள்.. ஆனால், இந்த விவகாரத்தில் அப்படி எதையும் மறைக்க முடியாது.. மறைத்தாலும் அது நிலைக்காது.. எப்படியிருந்தாலும் அந்த அபாயகரமான செய்தி வெளியே வந்துவிடவே செய்யும்... அதனால் அரசு எந்திரம் வெளிப்படையாகவே உள்ளது!!

  உழைப்பு

  உழைப்பு

  எந்த மாவட்டமும் முதன்மையான மாவட்டமாகவே இருக்கவே விரும்பும் சூழலில், இந்த கொரோனா விவகாரத்தில் மட்டும் பின்னோக்கி ஓட ராப்பகலாக உழைக்கிறார்கள்.. தொற்று பாதித்த, பாதிக்கப்பட்ட என்ற வேறுபாடு எல்லாம் இல்லை.. யாருக்குமே இந்த வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதில்தான் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நல்லிணக்கமும், ஒற்றுமையும்தான் தமிழகத்தில் உயிரிழப்பை கட்டுப்படுத்தவும் காரணமாகி உள்ளது.. நோய் தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.. எனினும், இந்த சூப்பர் ஆக்‌ஷன் டீமுடன் அந்தந்த மாவட்ட பொதுமக்களும் முழமையாக ஒத்துழைத்தால் கேரளாவை நாம் மிஞ்சலாம்!

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  coronavirus: tn government officials are doing their best to control the virus
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X