சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனிமைப்படுத்துதல்.. கொரோனா சோதனை.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.. முதல்வர் அதிரடி!

நாடு முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    New Rules On Quarantine And Testing In Tamilnadu

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலும் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.

     1990 முதல் 2020மாவது வருடத்திற்குள் வேலை பார்த்தவர்கள் அரசிடம் ரூ.1.20 லட்சம் பெறலாமா? உண்மை இதுதான் 1990 முதல் 2020மாவது வருடத்திற்குள் வேலை பார்த்தவர்கள் அரசிடம் ரூ.1.20 லட்சம் பெறலாமா? உண்மை இதுதான்

    தமிழக அரசின் தனிமைப்படுத்துதல் விதிமுறை

    தமிழக அரசின் தனிமைப்படுத்துதல் விதிமுறை

    நாடு முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படுவார்கள். இப்படி அறிகுறி இருக்கும் நபர்கள் மட்டுமின்றி அறிகுறி இல்லாத நபர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    வீட்டிலேயே இருப்பார்கள்

    வீட்டிலேயே இருப்பார்கள்

    இவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். அதே சமயம் அறிகுறி இல்லாத நபர்கள் யாருக்கும் சோதனை செய்யப்பட மாட்டார்கள். அதே சமயம் வெளி மாவட்டம், அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இவர்களுக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் கண்காணிக்கப்பட மாட்டார்கள்.

    கர்ப்பிணி பெண்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

    கர்ப்பிணி பெண்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

    இதில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் சொந்த ஊருக்கு சென்றால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால் இவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    மறைவுக்கு சென்றால் விலக்கு

    மறைவுக்கு சென்றால் விலக்கு

    மேலும் குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்கு செல்பவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சொந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    English summary
    Coronavirus: The Tamilnadu government releases new rules on quarantine and testing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X