சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதிவேக கொரோனா பாதிப்பு - கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் ? தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000-த்தை நெருங்கி உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ஒருநாள் பாதிப்பு 100-ஐ கடந்ததாக உள்ளது.

Coronavirus: TN Govt to impose more Restrictions?

இதையடுத்து தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு உள்ளிட்டவற்றை அமல்படுத்தி வருகின்றன.

கும்பமேளாவில் ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி- ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு! கும்பமேளாவில் ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி- ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு!

இதனால் தமிழகத்திலும் அத்தகைய அதிதீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்திலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது தெரியவரும்,.

English summary
According to the sources, Tamilnadu Govt may impose more Restrictions due to the increase of the Corona Cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X