தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று... இன்று 827 பேர் இன்று குணமடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,27,614ஆக உயர்ந்துள்ளது.

827 பேர் இன்று மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,08,571 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6,807ஆக குறைந்துள்ளது

இன்று கொரோனாவிற்கு மாநிலம் முழுவதும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 பேரும், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12236 பேராக அதிகரித்துள்ளது.
55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295
இன்று ஒரே நாளில் 60,563 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 49லட்சத்து 45 ஆயிரத்து 576ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 416 பேர் ஆண்கள், 255 பேர் பெண்கள். தமிழகத்தில் 249 பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னையில் இன்று கொரோனாவிற்கு 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 219 பேர் குணமடைந்துள்ளனர். கோவையில் 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் புதிய உருமாறிய கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.