சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,71,619ஆக அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,622ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 1904 பேர் குணமடைந்தனர். மொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,47,752 ஆக அதிகரித்துள்ளது.

 Coronavirus updates TamilNadu : Tamilnadu corona recoveries 7,47,752

புதிதாக 64 ஆயிரத்து 377 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆண்கள் 958 பேருக்கும் பெண்கள் 666 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம்கொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம்

அதில் சென்னையில் 483 பேருக்கும், கோவையில் 140, செங்கல்பட்டில் 99, திருவள்ளூரில் 79, சேலத்தில் 77 ஈரோடு, காஞ்சிபுரத்தில் தலா 72, திருப்பூரில் 67, என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,47,752- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 12,245- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

English summary
Corona infection has been confirmed in 1,624 people in Tamil Nadu. This brings the total number of victims so far to 7,71,619. The death toll from the corona has risen to 11,622 so far, killing 17 people in Tamil Nadu in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X