சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதற்குத்தான் போராடுகிறோம்.. 2 வகையான கொரோனா சர்வைலன்ஸ்.. அரசின் பிளான்.. பீலா ராஜேஷ் செம விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக இரண்டு வகையான சர்வைலன்ஸ் பணிகள் நடப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Beela Rajesh : தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்வு

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழகத்தில் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கிறது, இதற்காக என்ன திட்டங்கள் வகுக்கப்பட்டது என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    யார் இந்த பீலா ராஜேஷ்? குடும்ப பின்னணி என்ன? யார் இந்த பீலா ராஜேஷ்? குடும்ப பின்னணி என்ன?

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    பீலா ராஜேஷ் தனது பேட்டியில் கன்டெய்ன்மெண்ட் பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம். முதலில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு இடத்தை தேர்வு செய்வோம். அதை வைத்து மேப் உருவாக்குவோம். அங்கு எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சோதனை செய்வோம். அந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் பகுதிக்கு சோதனைகளை செய்வோம். இதைத்தான் கன்டெய்ன்மெண்ட் சோன் என்று கூறுகிறோம்.

    இரண்டு வகை சோதனை

    இரண்டு வகை சோதனை

    அதன்பின் அங்கு இரண்டு வகையில் சர்வைலன்ஸ் பணிகளை மேற்கொள்வோம். இதை ஆக்டிவ் சர்வைலன்ஸ் , பாஸிவ் சர்வைலன்ஸ் என்று கூறுவோம். அங்கு எத்தனை பேருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது என்று பார்ப்போம். அறிகுறி உள்ளவர்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் ஆக்டிவ் சர்வைலன்ஸ் செய்து வருகிறோம் குறைவான நபர்கள் இருக்கும் இடத்தில் பாஸிவ் சர்வைலன்ஸ் செய்து வருகிறோம்.

    எத்தனை வீடுகள்

    எத்தனை வீடுகள்

    இது ஒரு நாள் மட்டும் செய்வதில்லை. தினமும் இந்த கன்டெய்ன்மெண்ட் பகுதிகளுக்கு செல்கிறோம். இதுவரை 34 மாவட்டங்களில் தமிழக அரசு இந்த கன்டெய்ன்மெண்ட் சோதனைகளை செய்து வருகிறது. மொத்தம் 15 லட்சத்து 66448 வீடுகளில் இந்த சோதனைகளை செய்து இருக்கிறோம். இதுவரை மொத்தம் 53 லட்சத்து 67238 பேருக்கு இந்த சோதனைகளை செய்து உள்ளோம்.

    ஸ்டேஜ் 2ல் இருக்கிறோம்

    ஸ்டேஜ் 2ல் இருக்கிறோம்

    38 ஆயிரம் பேர் எங்களுக்காக இதில் களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள். முக்கியமாக சென்னையில் வீடு வீடாக சென்று பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் மருத்துவர்களுக்கு போதுமான மாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. எங்கும் மாஸ்க் பற்றாக்குறை நிலவவில்லை, தமிழகத்தில் இன்னும் ஸ்டேஜ் 3 வரவில்லை. ஸ்டேஜ் 2ல் இருக்கிறோம். 3 செல்லாமல் தடுப்பது முக்கியம். அதற்காகத்தான் போராடி வருகிறோம் என்று பீலா ராஜேஷ் விளக்கி உள்ளார்.

    English summary
    Coronavirus: We do two kinds of surveillances in TN says Beela Rajesh on containment plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X