சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிரட்டும் ஜூம் - கூகுள் மீட்.. வாட்ஸ்ஆப் அதிரடி.. ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் பார்த்துட்டே பேசலாம்

வாட்ஸ்அப் வீடியோ காலில் 4 பேருக்கு மேல் பேசும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு சூப்பர் நியூஸ் வெளியாகி உள்ளது... வாட்ஸ்அப்-பில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோகால் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்போகிறார்களாம்... எல்லாம் லாக்டவுனுக்காகத்தான்.

Recommended Video

    Central Govt Warning! ZOOM App ஆபத்தானது | மக்களே உஷார்

    ஊரடங்கு அமலில் உள்ளது.. எல்லாருமே வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.. அலுவலகங்கள் இயங்காததால் வீட்டிலேயே வேலை பார்த்து வருகின்றனர்.

    எந்த கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை. ஒட்டுமொத்த துறையிலும் முடக்கம் உள்ளதால், உலக நடப்புகளை நமக்கு தெரிவிக்கும் ஒரே சோர்ஸ் சோஷியல் மீடியாதான்.

    ஆயுதம்

    ஆயுதம்

    வைரஸ் தொற்று, பலி எண்ணிக்கை, பாதிப்பு எண்ணிக்கை முதல் அடக்கம் செய்ய முடியாமல் பிணத்துடன் தவிப்பது வரை நாம் தெரிந்து கொள்ள கூடியது இந்த சோஷியல் மீடியா மூலம்தான். அந்த வகையில் ஊரடங்குக்கு இது ஒரு ஆயுதமாகவும், பாலமாகவும் இருந்து வருகிறது... அதுமட்டுமல்ல முடங்கி கிடக்கும் அனைவருக்கும் ஒரே பொழுதுபோக்கு இந்த வாட்ஸ்அப், பேஸ்புக்குகள்தான்.

    தேர்வுகள்

    தேர்வுகள்

    தேர்வுகளும் ஆன்லைனில் நடக்கிறது, கல்லூரி பாடங்களும் ஆன்லைனில் நடக்கிறது, ஆபீஸ்களும் ஆன்லைனில் இயங்குகின்றன.. இதற்காக பல செயலிகள் பயன்படுத்தப்பட்டாலும், ஜூம் ஆப்-பில் சில புகார்கள் எழுந்தன... அந்த ஆப் அவ்வளவாக பாதுகாப்பு இல்லாதது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    வீடியோ கால்கள்

    வீடியோ கால்கள்

    அதேசமயம் கூகுள் மீட் மற்றும் ஹேஹ்அவுட் மூலமாகவும் வீடியோ கால்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளன. இதைப் பார்த்த வாட்ஸ் ஆப் எங்கே நமக்கு ஆப்பு வந்து விடுமோ என பயந்து அதிரடியாக ஒரு ஸ்பெஷல் திட்டத்தை கொண்டு வர போகிறது.. இப்போதைக்கு நம்மால் வீடியோ காலில் ஒரே நேரத்தில் 4 பேர் மட்டும்தான் பேச முடியும்.. ஆனால் இனிமேல் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோகால் மூலம் பேசும் வசதியை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளது..

    சூப்பர் வசதி

    சூப்பர் வசதி

    லாக்டவுன் சமயத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ காலில் பேசுவதால் பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.. அதனால் எப்படியும் கூடிய சீக்கிரம் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 பேர் கூடி பேசினாலே சத்தமாக கத்தி பேசி நிலையும் ஏற்படுவது உண்டு.. இனி காது ஜவ்வு கிழிந்துவிடும் போல.. எப்படி இருந்தாலும் வாட்ஸ்அப்பின் இந்த திட்டம் சிறப்பானது.. நிச்சயம் வீட்டில் வேலை பார்க்கும் அலுவலர்கள் உட்பட பல தரப்பினருக்கும் இது உபயோகமாக இருக்கும் என்றே தெரிகிறது!

    English summary
    Coronavirus: whatsapp group video calls more than four people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X