சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகனிசம் பரப்பும் விஷம வதந்தி.. சிக்கன், மட்டன் சாப்பிட்டால் கொரோனா வருமா? உண்மை என்ன?

கொரோனா வைரஸ் இந்தியா முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில் சிக்கன், மட்டன் தொடர்பான நிறைய வதந்திகளும் பரவி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் இந்தியா முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில் சிக்கன், மட்டன் தொடர்பான நிறைய வதந்திகளும் பரவி வருகிறது. சிக்கன் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று தேவையில்லாத, பொய்யான வதந்திகள் பரபரப்பப்பட்டு வருகிறது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பாதிப்பு... கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது

    கொரோனா இந்தியாவில் மொத்தம் 107 பேருக்கு தாக்கியுள்ளது. இதில் மும்பை மற்றும் கேரளாதான் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எப்போதும் போல அசைவ உணவுகளுக்கு எதிராக பிரச்சாரம் தொடங்கப்பட்டு வருகிறது.

    அசைவம் சாப்பிட்டால் கொரோனா பரவும், எங்களை போல எல்லோரும் சைவத்திற்கு மாறுங்கள் என்று ஒரு தரப்பினர் கொரோனா பரவும் வேளையில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்தியாவில் அசைவ மார்க்கெட்டை காலி செய்ய தீவிரமாக உழைக்கும் நபர்கள், இந்த கொரோனா வைரஸ் நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    தமிழர்கள் இருக்கும் இடம்.. மகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா.. என்ன நடந்தது, எப்படி பரவியது?தமிழர்கள் இருக்கும் இடம்.. மகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா.. என்ன நடந்தது, எப்படி பரவியது?

    வேகன்

    வேகன்

    உலகம் முழுக்க வேகன் வாழ்வியல் முறை பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வேகன் வாழ்வியலில் எந்த விதமான தவறும் கிடையாது. முழுக்க முழுக்க வெஜிடேரியன் உணவுகளை மட்டுமே உண்பதைதான் வேகன் வாழ்வியல் என்கிறார்கள். ஆனால், இந்த வேகன் வாழ்வியல் தற்போது பெரிய அரசியலாக, வியாபாரமாக மாறி இருக்கிறது. உலகம் முழுக்க வேகன் மார்கெட்டிற்கு பெரிய அளவில் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால், இதை பெரிதுபடுத்த பலர் வேலை செய்து வருகிறார்கள்.

    வேகம் எப்படி

    வேகம் எப்படி

    வேகன்தான் சுத்தமானது, அதுதான் சரியானது, உடலுக்கு நல்லது என்று வேகன் தொடர்பாக தீவிரமான பரிந்துரைகள் செய்யப்பட்டு வருகிறது. அசைவ உணவு மார்க்கெட்டை மொத்தமாக காலி செய்ய வேகன் விரும்பிகள் பலர் சமூக வலைத்தளங்களிலும் , நிஜத்திலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உலகம் முழுக்க இந்த வேகன் மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இது உலகின் மிகப்பெரிய உணவு சந்தையான அசைவ உணவு சந்தையை பெரிய அளவில் காலி செய்துள்ளது.

    சென்னை

    சென்னை

    வேகன் குறித்து வீடியோ, கருத்தரங்கு, கட்டுரைகள் என்று நிறைய எழுதி எழுதி பல கோடி மக்கள் நம்பி இருக்கும் அசைவ மார்க்கெட் படுத்தது. இதனால் பல நாடுகள் பெரிய இழப்பை சந்தித்தது. முக்கியமாக இந்தியாவின் அசைவ ஏற்றுமதியும் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அமெரிக்காவில் வேகனிசம் பெரிய சந்தையாகி உள்ளது. அதேபோல் சென்னையிலும் வேகன் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கி உள்ளது.

    நாய்கறி எப்படி

    நாய்கறி எப்படி

    சென்னையில் பிரியாணி மார்க்கெட் பெரிய அளவில் உள்ளதால், அதை ஒடுக்கும் பொருட்டு நாய்கறி வதந்தி பரப்பப்பட்டது. இந்த நாய்கறி வதந்திக்கு பின்பும் கூட வேகன் குழு ஒன்றுதான் இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டது. நாய்கறி பிரச்சனை வந்த போது அசைவ உணவுகளே இப்படித்தான், அதில் சுத்தம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று தொடர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இதனால் சென்னையின் அடையாளமாக இருந்த பல பிரியாணி கடைகள், அசைவ ஹோட்டல்கள் ஒரே வாரத்தில் பெரிய பாதிப்பை சந்தித்தது.அதன்பின் இந்த நாய்கறி என்பது முழுக்க முழுக்க வதந்தி என்று உணவு பாதுகாப்புத்துறை மூலம் உறுதி செய்யப்பட்டது.

    தற்போது மீண்டும்

    தற்போது மீண்டும்

    தற்போது மீண்டும் அதேபோல் கொரோனா வைரஸ் நேரத்தில் சிக்கன், மட்டனுக்கு எதிராக பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஒழுங்காக சைவத்திற்கு மாறி விடுங்கள், இல்லையென்றால் வைரஸ் தாக்கும் என்று கொரோனா நேரம் பார்த்தும் பொய்யான வதந்திகள் பரப்பப்படுகிறது. மக்களுக்கு தேவையில்லாத பீதிக்கு உள்ளாக்கும் வகையில் இந்த இந்த பொய்யான வதந்திகள் இணையத்தில் உலவி வருகிறது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இது தொடர்பாக உலக சுகாதார மையம் ஏற்கனவே உண்மைகளை வெளியிட்டுவிட்டது. சிக்கன், மட்டன் மூலம் கொரோனா வைரஸ் பரவாது, அசைவம் சாப்பிடுவதாலோ, விலங்குகள் உடன் விளையாடுவதாலோ வைரஸ் பரவாது. இது தொடர்பான பொய்யான வதந்திகளை பரப்புவது குற்றம் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.

    நிரூபிக்கப்படவில்லை

    நிரூபிக்கப்படவில்லை

    அதேபோல் சிக்கன், மட்டன் மூலம் வைரஸ் பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை. வாட்ஸ் ஆப்பீல் வரும் தவறான, பொய்யான செய்திகளை மக்கள் நம்பி ஏமாற்றம் அடைந்ததுதான் தற்போது மிச்சம். இந்த வைரஸ் அதிகபட்சம் வெவ்வால்கள் மூலம் பரவி இருக்கலாம் என்றுதான் சந்தேகிக்கப்படுகிறது. வௌவ்வாலின் சிறுநீர் அல்லது இறைச்சி மூலம் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விலை குறைவு

    விலை குறைவு

    ஆனால் இந்த பொய்யான வேகன் வதந்தி காரணமாக, உலகம் முழுக்க சிக்கன், மட்டன் விலை குறைந்துள்ளது. சிக்கன் விலையில் 70 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. 200 ரூபாய்க்கு விற்ற சிக்கன் 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேபோல் மட்டன் விலை 65 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. பல இடங்களில் மீன் விலையிலும் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

    20 கோடி பேர்

    20 கோடி பேர்

    சிக்கன், மட்டன் கடைகள், பிரியாணி வியாபாரம், மீனவர்கள் , மீன் கடைகள் அசைவ உணவகங்கள், அசைவ ஏற்றுமதி நிறுவனங்கள் என்று மொத்தம் 20 கோடி பேர் இந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள். ஆனால் வேகன் அரசியல் எனப்படும் வெகு சிலரின் நன்மைக்காக மிக மிக பொய்யான வதந்திகளை சிலர் பரப்பி வருவது பலரின் வாழ்க்கையை மொத்தமாக நேரடியாக பாதிக்கிறது!

    English summary
    Coronavirus: Will chicken, mutton spread the epidemic? - The experts say no.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X