சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல் தள்ளி போகுமா.. ஆளுநர் ஆட்சி வருமா.. டரியல் ஆகும் கட்சிகள்.. யாருக்கு லாபம்?

தமிழக சட்டசபை தேர்தல் தள்ளி போட வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தல் தள்ளிப் போகுமா.. இப்படி ஒரு டாக் திடீரென கிளம்பியுள்ளது... தள்ளிப் போக சொல்லப்படும் காரணம் கொரோனாதான்.

Recommended Video

    சட்டசபை தேர்தல் தள்ளி போகுமா.. யாருக்கு லாபம்?

    இந்தியாவை பொறுத்தவரை 2021 தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பது கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம்.. புதுச்சேரியிலும் இதே காலகட்டத்தில்தான் தேர்தல் நடைபெறும். இதற்கான யுக்திகளைதான் 3 மாசத்துக்கு முன்பே கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வந்தன.

    குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் திமுக, அதிமுக படு சுறுசுறுப்பாக வேலையில் இறங்கின.. களப்பணியில் ஈடுபட்டன... ஆனல் கொரோனா படுத்தும் பாடு இவைகளை எதுவுமே யோசிக்க விடவில்லை.. தொற்றை ஒழிக்க அனைவருமே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பாடுபட்டு வருகிறார்கள்.. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனில் திராவிட கட்சிகள் இறங்கி உள்ளன.

    சிக்கல்கள்

    சிக்கல்கள்

    தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.. தேசிய அளவில் 6வது இடத்தில் இருக்கிறது.. இந்த சூழலில் தேர்தலை எதிர்கொள்வதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன.. கொரோனா பாதிப்பு பல மாதங்களுக்கு தொடரும் நீடிக்கும் என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு மாதம் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    ஆனால் நடைமுறையில் இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. தேர்தலை நடத்தினாலும் கூட தேர்தல் பிரச்சாரத்தை நடத்த முடியாது. வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிப்பதிலும் சிக்கல்கள் வரும். அதிகாரிகள் உட்பட யாரையுமே பெரிய அளவில் பணிகளிலும் ஈடுபடுத்த முடியாது. தேர்தல் என்றாலே பிரச்சாரம்தான்.. மக்கள் கூட்டம், பொதுக் கூட்டம் இதெல்லாம் இயல்பானவை.

    தலைநகரம் சென்னை

    தலைநகரம் சென்னை

    தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 மாவட்டங்கள் ரெட் ஸோன் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சென்னையில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளது. பாதிப்பே இல்லாத கிருஷ்ணகிரிக்கும் கூட வந்து விட்டது. அதனால் இப்போதைக்கு தேர்தல் என்பது தமிழகத்தில் நடைமுறை சாத்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே தேர்தலை எதிர்கொள்வதாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முதல் ஆரம்பிக்க வேண்டும்.. இவைகளை சமூக விலகலுடன் கடைப்பிடிக்க முடியுமா என்பதும் அடுத்த சந்தேகம்தான்!!

    ஆட்சி

    ஆட்சி

    தமிழகத்தில் தேர்தல் இல்லை என்றால் இனி அரசியல் களம் எப்படி இருக்கும்? இதை 2 வகையாக பிரித்து பார்க்கலாம்.. முதலாவதாக ஆளும் தரப்பு மேலும் தங்கள் ஆட்சியை தொடர முடியாது.. ஆட்சிக்காலம் முடிவடையும்போது ஆளுநர் ஆட்சி அமலாகி விடும். அடுத்த தேர்தல் நடைபெறும் வரை ஆளுநர் ஆட்சிதான் நடைபெறும். அரசின் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் போனால் அது அதிமுகவுக்கு பாதகம்தான்.

    திமுக - அதிமுக

    திமுக - அதிமுக

    அதேபோல திமுகவை எடுத்து கொண்டாலும் ஏற்கனவே தேர்தலை சந்தித்தும் 9 வருஷமாக ஆட்சியில் இல்லாத நிலையில், தேர்தல் தள்ளிப் போனால் அது நிச்சயம் திமுகவுக்கு பெரும் ஏமாற்றாகமாவே அமையும். காரணம் பிகே முதற்கொண்டு பல வேலைகளை செய்து வைத்து காத்திருக்கிறது. மக்கள் தங்கள் பக்கம்தான் என்ற பெரிய நம்பிக்கையிலும் திமுக உள்ளது. விட்டதை பிடிக்கதான் பிகேவை கொண்டு வந்து நிறுத்தி தீவிர திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.. அவைகளில் பல திட்டங்கள் உண்மையிலேயே வரவேற்பையும் பெற்றுள்ளன.. ஒருவேளை தேர்தல் எதிர்பார்த்தபடியே திமுகவுக்குப் பிரச்சினை இல்லை. நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் அக்கட்சியின் செயல்பாடுகள் உள்ளன.

    ஆளுநர் ஆட்சி

    ஆளுநர் ஆட்சி

    தேர்தல் தள்ளிபோனால் என்ன நடக்கும்? கவர்னர் ஆட்சிதான் ஒரே வழி.. எம்ஜிஆர் மறைந்தபோது ஆளுநர் ஆட்சி அமலானது. அப்போதைய ஆளுநர் பிசி அலெக்சாண்டர் சில காலம் ஆட்சி புரிந்தார். தமிழகம் ஆளுநர் ஆட்சியை சந்திப்பது புதிதல்ல. ஏற்கனவே சில காலம் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் இருந்திருக்கிறது. ஆளுநர் ஆட்சியால் என்ன சாதகம் என்ன பாதகம் என்பது நடக்கும் போதுதான் தெரிந்து கொள்ள முடியும். காரணம் மத்தியில் உள்ள ஆட்சியின் வழிகாட்டுதலில்தான் ஆளுநர் ஆட்சி பொதுவாக அமையும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

    சாத்தியங்கள் என்ன?

    சாத்தியங்கள் என்ன?

    எனவே ஆளுநர் ஆட்சி அமலானால் அதன் மூலம் பாஜக தனது முத்திரையை தமிழக மக்களிடம் பதிக்க கண்டிப்பாக முயலும். மக்களுக்கு சாதகமான விஷயங்களை செய்ய முன்வரலாம்.. இத்தனை வருடமாக முட்டி மோடியும் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியாத நிலையில் உள்ள பாஜக நிச்சயம் இதை ஒரு வாய்ப்பாக எடுத்து கொள்ளும்.. தான் நேரடியாக ஆட்சியமைத்தால் என்னெல்லாம் செய்வோம் என்பதை ஆளுநர் ஆட்சி மூலம் மறைமுமாக மக்களுக்குக் காட்ட முயலும். ஆனால் இதெல்லாம் வெறும் அனுமானங்கள்தான். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.. அதற்குள் நிலைமை மாறலாம்.. ஆனால் கொரோனா பாதிப்பு அடுத்த வருடம் வரை தொடரும் என்று ஹூ சொல்லி வருவதால் இந்த எதிர்பார்ப்புகளும் எழத் தொடங்கி விட்டன.

    English summary
    coronavirus: Will the Tamil Nadu assembly elections 2021 be postponed
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X