சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரேபிட் கிட் விலை என்ன.. எத்தனை வாங்கனீங்க.. வெளிப்படை வேணும்".. முதல்வரை விடாமல் விரட்டும் ஸ்டாலின்

ரேபிட் கிட் கருவிகளின் விலை என்ன என்று அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஸ்டாலின் கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று முதல்வர் சொன்னாலும், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வருகிறார் திமுக தலைவர்!! ரேபிட் டெஸ்ட் கிட் விலை என்ன, எத்தனை வாங்கினீங்க என்று தற்போது அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.

தமிழகத்திலும் வைரஸ் பரவல் பெருகி வருகிறது.. மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பிக்கவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தடுக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.

இந்தியாவிற்குள் ஊடுருவிய இந்த கொரோனாவைரஸ், தமிகத்திலும் பரவி பெருகி வருகிறது.. மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பிக்கவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தடுக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.

இந்த தொற்று உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள போதுமான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் இல்லை.. அதனால் டெஸ்ட் முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள வெளிநாடுகளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பரிசோதனை

பரிசோதனை

அரை மணி நேரத்தில் இந்த ரிசல்ட்களை தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.. எனவே கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு ஏற்கனவே ஆர்டர் செய்திருந்தது. அதன்படி சென்னைக்கு முதற்கட்டமாக, 24 ஆயிரம் கருவிகள் வந்தடைந்துள்ளன.. பின்னர் இவைகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அதன்மூலம் டெஸ்ட்களும் நடந்து வருகிறது.

கருவிகள்

கருவிகள்

தமிழகத்தை போலவே சத்தீஸ்கர் மாநிலத்திலும் ரேபிட் கிட் கருவிகள் கொரியாவில் இருந்து தருவிக்கப்பட்டன.. அவைகளை வைத்து அங்கும் சோதனைகள் விறுவிறுவென நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில்தான் அம்மாநில மாநில காங்கிரஸ் எம்எல்ஏ டிபி சிங் தியோ, தென்கொரியாவில் இருந்து 75ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மாநிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒரு கிட்டின் விலை ரூ.337 + ஜிஎஸ்டி என்றும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர்

அதுமட்டுமில்லை.. மாநில அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியா, தென்கொரிய நாட்டு தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் இவை வாங்கப்பட்டு உள்ளன என்றும் பெருமையாக கூறியிருந்தார். இப்படி சத்தீஸ்கர் அரசு வெளிப்படையாக உள்ளதைதான் பிரத்யேகமாக குறிப்பிட்டு, திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..

வெளிப்படைத்தன்மை

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "#CoronaVirus பரிசோதனைக் கருவிகள் எத்தனை - என்ன விலை - எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்!," என வலியுறுத்தி உள்ளார்.

English summary
coronavirus: will the tn gov release the corona rapid kid price, mk stalin questions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X