சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லதாவுக்கு கொரோனா இல்லை.. சளி, இருமல்.. ஆனாலும் அவர் எடுத்த முடிவு.. மக்களுக்கு கவுன்சிலிங் தேவை!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவேளை தனக்கு கொரோனாவா இருக்குமோ என்று பீதியிலேயே இருந்திருக்கிறார் லதா என்ற பெண்.. இப்படி பயந்து பயந்து சாகிறதைவிட இறப்பதே மேல் என்று தூக்கு போட்டு தறகொலையும் செய்து கொண்டார்!

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    நாட்டிற்குள் கொரோனா வைரஸ் கிருமி பரவி வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.. மத்திய, மாநில அரசுகள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் மக்களை அளவுக்கு அதிகமாக பயத்தை உண்டு பண்ணியபடியே உள்ளது.. காரணம், நமக்கு வழக்கமாக வரும் சளி, இருமல் பிரச்சனைதான் இந்த கொடூரமான வைரஸ் தொற்றுக்கும் அறிகுறியாக சொல்லப்படுகிறது.

    காய்ச்சல்

    காய்ச்சல்

    அதனால் சாதாரணமாக இருமல், சளி வந்தவர்களும் பயந்தபடியே உள்ளனர்.. முன்னெச்சரிக்கையாக தாங்களேவே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து கொண்டும் வருகின்றனர்.. இது முழுக்க முழுக்க நல்ல விஷயம்தான்.. அலட்சியம் இல்லாமல் இருப்பதைவிட, டெஸ்ட் செய்து கொள்வதும் தனிமைப்படுத்தி கொள்வதும் வரவேற்கக்கூடியதே! ஆனால், எந்த டெஸ்டும் செய்து கொள்ளாமல் இருமல், சளி வந்தவுடன் தற்கொலை செய்து கொள்வது அநியாயமாக உள்ளது. அதனால் சாதாரணமாக இருமல், சளி வந்தவர்களும் பயந்தபடியே உள்ளனர்.. முன்னெச்சரிக்கையாக தாங்களேவே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து கொண்டும் வருகின்றனர்.. இது முழுக்க முழுக்க நல்ல விஷயம்தான்.. அலட்சியம் இல்லாமல் இருப்பதைவிட, டெஸ்ட் செய்து கொள்வதும் தனிமைப்படுத்தி கொள்வதும் வரவேற்கக்கூடியதே! ஆனால், எந்த டெஸ்டும் செய்து கொள்ளாமல் இருமல், சளி வந்தவுடன் தற்கொலை செய்து கொள்வது அநியாயமாக உள்ளது.

    ஆர்கே நகர் லதா

    ஆர்கே நகர் லதா

    இதுபோன்ற அப்பாவிகளின் ஜீரணிக்க முடியாத மரணங்கள் மற்றவர்களையும் நிலைகுலைய வைத்து விடுகிறது. சென்னை ஆர்கே நகரில் லதா என்ற 34 வயது பெண் வசித்து வந்துள்ளார்.. சளி, இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. டெஸ்ட் எதுவும் செய்ய காணோம்.. ஒருவேளை கொரோனாவா இருக்குமோ என்று பயந்து கொண்டு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போஸ்ட் மார்ட்டம்

    போஸ்ட் மார்ட்டம்

    தகவலறிந்து ஆர்கே நகர் போலீசார் விரைந்து லதாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில் லதாவுக்கு கொரோனா தொற்று இல்லவே இல்லை என்று தெரியவந்தது.. அதன்பிறகு அவருடைய உடல் உறவினர்களிடம் கொடுத்து அடக்கம் செய்யப்பட்டது.

    தற்கொலை

    தற்கொலை

    இதேபோல, புதுக்கோட்டையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்கு ஒரு இளைஞர் கொரோனா அச்சத்தால் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.. தனிமைப்படுத்தப்பட்டதற்கே மனஉளைச்சல் ஏற்பட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இப்படி தமிழ்நாடு என்று மட்டும் இல்லை.. நாடு முழுவதுமே ஆங்காங்கே இதுபோன்ற நிலை உள்ளது.. பெரெய்லி மாவட்டத்தில் இன்னொரு இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    உபியில் சுஷில் என்ற இளைஞருக்கு இருமல், காய்ச்சல் இருந்துள்ளது.. உடனே ஒரு லட்டர் எழுதினார், "அப்பா, அம்மா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. முதல்ல எல்லாரும் போய் கொரோனா டெஸ்ட் செய்துக்குங்க" என்று எழுதி வைத்துவிட்டு, பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு இறந்துவிட்டார். இதற்கெல்லாம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். மேலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள மக்களுக்கு தேவையான கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.

    கவுன்சிலிங்

    கவுன்சிலிங்

    இருமல், சளி வந்தாலே பயந்துவிடுகிறார்கள்.. சளி, இருமல், காய்ச்சல் இருந்தாலும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எத்தனை நாள் கழித்து டெஸ்ட் செய்ய வேண்டும், இதை எதிர்கொள்ள தேவையான மனஉறுதி குறித்த கவுன்சிலிங்தான் உடனடியாக தேவைப்படுகிறது.. இல்லையென்றால் கொரோனா வந்து இறப்பதைவிட, கொரோனா வந்துவிடுமோ என்று பயந்து இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்!

    English summary
    coronavirus: woman committed suicide due to virus panic
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X