சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் அச்சம்.. 12 நாட்டு பயணிகள் சென்னை வர அதிரடி தடை

Google Oneindia Tamil News

சென்னை: உலகின் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து சென்னைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Corona Virus in Tamilnadu | Trichy Government Hospital

    கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வருபவர்களிடம் இருந்து தான் பரவி இருக்கிறது. இதனால் அங்கு இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை ஸ்கிரீன் டெஸ்ட் எனப்படும் பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

    coronovirus out break: 12 country people cannot come in chennai

    இது ஒருபுறம் எனில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து யாராக இருந்தாலும் இந்தியாவுக்கு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்திய பள்ளிகளுக்கு மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை!கொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்திய பள்ளிகளுக்கு மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை!

    சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்று மாநிலங்களில் பரவி இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக விமான நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.

    சென்னை விமானநிலையத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் சோதனை நடந்து வருகிறது. இங்கு சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் , தென்கொரியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து சோதனை நடந்து வந்தது. தற்போது கூடுதலாக இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், ஈரான், இத்தாலி உள்பட மொத்தம் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்துகிறோம்.

    ஏற்கனவே 28 நாட்கள் கண்காணிக்கப்பில் 1307 பேர் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். மேலும் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து விமானங்கள் இந்தியாவிற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு விசா கிடையாது. அந்த 12 நாடுகளில் இருந்து விமானங்களை கட்டுப்படுத்தி குறைத்து வருகிறோம். அந்த நாடுகளில் உள்ள நம்ம நாட்டினர் மட்டுமே வருவதற்கு அனுமதித்து வருகிறோம். மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது நம்மவர்களையும் தீவிரமாக கண்காணித்தே அனுமதிக்கிறோம். கொரோனா சோதனையில் எந்த தொய்வும் இல்லாமல் பணிகள் நடந்த வருகிறது" இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    English summary
    coronovirus out break:12 country people cannot come in chennai, says airport authority
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X