சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டெல்லி" பறக்கும் எடப்பாடி.. ஓபிஎஸ்ஸுக்கு புது சேலஞ்ச்.. நாளைக்கேவா? எப்படி முடியும்..? பரபர அதிமுக

ஓபிஎஸ் டீமுக்கு எடப்பாடி ஆதவாளர் மதுரை ராஜ்சத்யன் முக்கிய சவாலை எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், எடப்பாடி தரப்பில் இருந்து முக்கிய சவால் ஒன்று ஓபிஎஸ்ஸை நோக்கி பாய்ந்துள்ளது..!

Recommended Video

    OPS-EPS இணைகிறார்களா?

    அதிமுக பொதுக்குழு விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.. தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பில் இன்று கூறியுள்ளது.

    அதேபோல, ஜுன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை எடப்பாடி தனியாக கூட்ட முடியாது.. அப்படியே கூட்டினாலும், அதற்கு ஓபிஎஸ் கையெழுத்து தேவை..

    பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ்ஸுக்கு உதவிய 7 பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ்ஸுக்கு உதவிய 7

    சாராம்சம்

    சாராம்சம்

    இந்த இடைப்பட்ட காலத்தில் எடப்பாடியின் நியமனங்கள் எதுவும் செல்லாது என்பதே இன்றைய தீர்ப்பின் சாராம்சமாக உள்ளது.. எனவே, ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது.. இந்த தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள், ஓபிஎஸ் தரப்பை விமர்சித்து வருகிறார்கள்.

     ரிடர்ன் வாதங்கள்

    ரிடர்ன் வாதங்கள்

    இது ஒன்றும் இறுதி தீர்ப்பு கிடையாது, தீர்ப்பின் நகல் வந்தவுடன் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஓபிஎஸ் தரப்பினரோ, "ஓபிஎஸ் தரப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது, நாங்கள் முன்வைத்த வாதத்தை ஏற்றுதான், நீதிமன்றம் இப்படி தீர்ப்பை வழங்கியுள்ளது, கடந்த 23.6.2022 அன்று இரண்டு பதவிகளும் காலாவதியாகவில்லை....

    திருத்தங்கள்

    திருத்தங்கள்

    2 பதவிகளும் தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருந்து கொண்டுள்ளது.. எந்தவிதமான திருத்தங்களும், ஒப்புதலுக்கு வைக்கப்படவுமில்லை, அவை நிராகரிக்கப்படவும் இல்லை.. என்பது போன்ற முக்கிய வாதத்தை நாங்கள் வைத்தோம்.. இது அப்படியே நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது" என்று மார்தட்டி வருகின்றனர்.

    சேலஞ்ச்

    சேலஞ்ச்

    ஆனால், இதற்கும் எடப்பாடி தரப்பில் பதிலடி தரப்பட்டு வருகிறது. அந்த வகையில், எடப்பாடி ஆதரவாளர் ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளருமான ராஜ் சத்யன் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "மொத்தமுள்ள 2663 பொதுக்குழு உறுப்பினர்களின் 2532 உறுப்பினர்களால் அண்ணன் எடப்பாடியாரின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்னரை கோடி தொண்டர்களுக்கான ஒருமித்த குரலாய் ஒலித்து வருகிறார், தேவைப்பட்டால் 15 நாட்களில் அல்ல, நாளையே பொதுக்குழுவை கூட்ட எங்களால் முடியும், உங்களால் முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

     ரத்தத்தின் ரத்தங்கள்

    ரத்தத்தின் ரத்தங்கள்

    ராஜ்சத்யன் எழுப்பிய இந்த கேள்வி மதுரை அதிமுகவில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஓபிஎஸ் தரப்பையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி இல்லாமல் கட்சியை நடத்த முடியாது என்ற சூழல் ஓபிஎஸ்ஸுக்கு வந்துள்ளது.. ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் எந்த ஒரு முடிவையும் அறிவிக்க முடியாத சூழல் எடப்பாடிக்கும் வந்துள்ளது.. அப்படி இருக்கும்போது இவர்கள் மறுபடியும் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் உள்ள நிலையில், ஆதரவாளர்கள் கேள்வி கேட்டு சவால் விடுத்து வருவது பரபரப்பையே கூட்டி வருகிறது.

    English summary
    Could you convene the General Assembly tomorrow, asks edapadi palanisamys supporter madurai raj sathyan ஓபிஎஸ் டீமுக்கு எடப்பாடி ஆதவாளர் மதுரை ராஜ்சத்யன் முக்கிய சவாலை எழுப்பி உள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X