சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டுக்கு போக மாட்டேன்.. உயிருக்கு ஆபத்து.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த திமுக பிரமுகரின் மகள்!

உயிருக்கு ஆபத்து என்று போலீசில் காதல் ஜோடி ஒன்று தஞ்சம் அடைந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "வீட்டுக்கு போக மாட்டேன்.. உயிருக்கு ஆபத்து" என்று திமுக பிரமுகரின் மகள் பாதுகாப்பு கோரி மதுரை திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பூந்தமல்லி ஸ்ரீ வித்திய கணபதி தெருவை சேர்ந்தவர் நிதர்சனா. நிதர்சனாவின் அம்மா காயத்ரி ஸ்ரீராம், 2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர். தற்போது சென்னை திருவள்ளுவர் தெற்கு தொகுதி துணை மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

Couple asylum in Thiruparankundram police Station

இந்நிலையில், நிதர்சனா, சேஷா நகரை சேர்ந்த மைக் ரிச்சர்ட்சன் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்திருக்கிறது. அதனால் இவர்கள் இருவரும் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கோரி திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.

இதனிடையே நிதர்சனாவை காணவில்லை என்று, பூந்தமல்லி ஸ்டேஷனில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதனால் பூந்தமல்லி போலீசார், மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு நிதர்சனாவை அழைத்து செல்ல வந்திருக்கிறார்கள்.

ஆனால் தம்பதியோ, சென்னைக்கு போனால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும், அவர்களுடன் செல்ல மாட்டேன் என்றும் சொல்லி உள்ளனர். இப்போதைக்கு இந்த வழக்கு, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் இருந்து, திருப்பரங்குன்றம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது.

வீட்டில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக நிதர்சனா குற்றஞ்சாட்டியிருப்பதும், தொடர்ந்து உயிருக்கு ஆபத்து இருப்பதால் பெற்றோருடன் செல்ல மறுப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Chennai Lovers surrender in Thiruparankundram police station and policeare investigating the matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X