சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 3 அலை ஏற்பட வாய்ப்பில்லை... சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்துவது ஏன் - அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் ஞாயிறுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமையான இன்றைய தினம் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 50ஆயிரம் இடங்களில் ஆறாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மதுப்பிரியர்கள், அசைவப்பிரியோர்களுக்காக ஞாயிறுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமையன்று தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் கொரோனா 3வது அலை வருமா? சுகாதார செயலாளர் பதில்!

    இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

    Covid 19 3 wave is not likely to occur in TN says Dr. Radhakrishnan

    தமிழ்நாட்டிலும் முழு வீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 5 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது பல கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    முதன்முறையாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முதல் மெகா வேக்சின் முகாமில் 28.91 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டது. அதேபோல செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற முகாமில் 16.43 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் முறையே 25.04 லட்சம் மற்றும் 17.04 லட்சம் பேருக்கு வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 22,52,641 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி டிவியில் பேசியது தப்பான தகவல்.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டுதடுப்பூசி பற்றி பிரதமர் மோடி டிவியில் பேசியது தப்பான தகவல்.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

    பண்டிகைக்காலம் என்பதால் கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. இன்றைய தினம் 6ஆம் கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 66 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அசைவ பிரியர்கள் ,மது குடிப்பவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிவரை நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக அரசிடம் சுமார் 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட அதிகமாக 50 ஆயிரம் இடங்களில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 6வது முறையாக சென்னையில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று கூறியுள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    English summary
    The sixth phase of corona vaccination camp is being held in 50,000 places in Tamil Nadu today. Public Welfare Secretary Dr Radhakrishnan said the vaccination camp for alcoholics and non-vegetarians would be held on Saturday in response to Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X