சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க, உதவிகளை செய்ய 3,500 தன்னார்வலர்கள் ந

Google Oneindia Tamil News

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணித்து, உதவிகளை செய்ய 3,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினசரியும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இன்று 2 ஆயிரத்தை தாண்டி 2,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 576 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

COVID-19 64000 person home quarantine in Chennai

இந்த நிலையில் சென்னையில் இதுவரை 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணித்து, உதவிகளை செய்ய 3,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பின் ஒரு பகுதியாக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள 200 கோட்டங்களிலும் 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை குழு தலைவராக நியமித்து, அவர்களுடன் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் ஆகியோரை இணைத்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் முழு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் எப்படி?.. 4.30 மணிக்கு விளக்குகிறார் காவல் துறை ஆணையர்சென்னையில் முழு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் எப்படி?.. 4.30 மணிக்கு விளக்குகிறார் காவல் துறை ஆணையர்

இந்தக்குழு வைரஸ் தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்வதுடன், வைரஸ் தொற்றின் தீவிரம் கருதி உடனுக்குடன் தகவல் தெரிவிப்பார்கள். மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளையும் செய்வார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க, உதவிகளை செய்ய 3,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடிசைவாழ் மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுடைய குடும்பமும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள உறவினர்களும் அருகில் உள்ள தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

இதற்காக 25 ஆயிரம் பேர் தங்கக்கூடிய அளவுக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 25 ஆயிரம் தங்குவதற்கு ஏதுவாக மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
So far, 64 thousand people have been isolated in their homes. Over 3,500 volunteers have been assigned to monitor and assist them. Those undergoing COVID-19 test must home quarantine for 14 days, says Chennai Corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X