சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் அவசியம்.. ஆலோசனை குழுவில் விஜயபாஸ்கர்.. ஸ்டாலினின் செம மூவ்.. இதுதான் முதல்வர்!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பெருந்தொற்று காலத்தில்.. ஒரு மாநில முதல்வர் எப்படி எல்லாம் செயல்பட வேண்டுமோ அப்படி எல்லாம் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். கசப்புகளை மறந்து, அரசியல் வேறுபாடுகளை தாண்டி எல்லா கட்சிகளையும் கொரோனாவிற்கு எதிரான போரில் ஸ்டாலின் இணைத்துக் கொண்டு இருகிறார்.

Recommended Video

    மக்களுக்கு உதவி செய்வதே முக்கியம்.. ஒன்றிணைந்து செயல்படும் அரசியல் கட்சிகள்!

    தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வேக்சின் வாங்க வெளிநாடுகளில் ஆர்டர் செய்தது தொடங்கி ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெமிடிஸ்வர் மருந்துகளை வாங்கி குவித்தது வரை முதல்வர் ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    துளசி அய்யா வாண்டையார் சென்னையில் காலமானார் - பூண்டியில் இறுதிச்சடங்கு துளசி அய்யா வாண்டையார் சென்னையில் காலமானார் - பூண்டியில் இறுதிச்சடங்கு

    அதிலும் எதிர்கட்சிகளை கூப்பிட்டு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டார். எந்த கட்சி வேறுபாடும் பார்க்காமல், ஈகோ பார்க்காமல் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    முன்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கோரிக்கை வைத்தபோது, ஆலோசனை சொல்ல எதிர்க்கட்சியினர் என்ன டாக்டர்களா என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ எப்படி பிடிவாதம் பிடிக்காமல், ஈகோ பார்க்காமல் எதிர்கட்சிகளை கூப்பிட்டு கொரோனாவை தடுக்கும் பொருட்டு ஆலோசனைகளை நடத்தினார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    அரசியல் பார்க்க.. பழிவாங்க இப்போது நேரம் இல்லை. முதலில் கொரோனாவை தடுப்போம். மற்ற அரசியலை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் மிகவும் தன்மையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இதனால்தான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யார் மீது குற்றம் சொல்லாமல், எதிர்கட்சிகளை விமர்சிக்காமல், கொரோனா தடுப்பு நடவடிக்கை மீது மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    இந்த நிலையில்தான் இன்னொரு அதிரடியாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசின் ஆலோசனை குழுவில் சட்டசபைக்கு தேர்வான எல்லா எதிர்க்கட்சிகளில் இருந்தும் ஒரு ஒரு உறுப்பினர் இடம்பெற்றுள்ளார். அதிலும் அதிமுக சார்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்பெற்றுள்ளார்.

    சிறப்பு

    சிறப்பு

    இதில் மொத்தம் 13 கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜயபாஸ்கர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர். முதல் அலையின் போது கொரோனாவை எதிர்கொண்ட அனுபவம் இவருக்கு இருக்கிறது. இவர் குழுவில் இடம்பெற்றுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர், அதிமுக காரர் என்றெல்லாம் பார்க்காமல் முதல்வர் ஸ்டாலின் கொரோனா காலம் என்பதால் பலரையும் அவரணைத்து செல்கிறார்.

    யார் எல்லாம் இருக்கிறார்கள்

    யார் எல்லாம் இருக்கிறார்கள்

    முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவில் பின் வரும் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்


    1. திமுக - மருத்துவர் நா.எழிலன்
    2. அதிமுக - மருத்துவர் சி.விஜய பாஸ்கர்
    3. காங்கிரஸ் - திரு.ஏ.எம். முனிரத்தினம்
    4. பாமக - திரு. ஜி.கே. மணி
    5. பாஜக - திரு. நயினார் நாகேந்திரன்
    6. மதிமுக - மருத்துவர் தி. சதன் திருமலைக்குமார்
    7. விசிக - திரு. எஸ்.எஸ்.பாலாஜி
    8. மா.,கம்யூனிஸ்ட் - திரு.வி.பி. நாகை மாலி
    9. கம்யூனிஸ்ட் - திரு. தி.ராமசந்திரன்
    10. மமக - முனைவர் ஜவாஹிருல்லா
    11. கொமதேக - திரு.ரா.ஈஸ்வரன்
    12. தவாக - திரு.தி.வேல்முருகன்
    13. புரட்சி பாரதம் - பூவை திரு.ஜெகன் மூர்த்தி

    English summary
    Covid 19 Committee: Tamilnadu CM Stalin goes against politics and stands firm with opponents. He brings Ex Minister Vijayabaskar and other opponent party members.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X