• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லேசாக தலைதூக்கும் கொரோனா.. வேகத்துக்கான அறிகுறி.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.. சென்னைவாசிகளே கவனம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிட்டிவ் ரேட் 0.5% முதல் 0.7% வரை அதிகரித்துள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் 1569 ஆக அதிகரித்து அதிர்ச்சியை கொடுக்கிறது.

  கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil

  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இதற்கு முக்கிய காரணமாகும்.

  ஒரு கட்டத்தில் 36,000-க்கு மேல் சென்ற தினசரி பாதிப்பு 2,000-க்குள் அடங்கியது. இதன் காரணமாக ஏரளாமான தளர்வுகளை அள்ளி தெளித்தது தமிழ்நாடு அரசு.

  சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்!சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்!

  எங்கும் கூட்டம்

  எங்கும் கூட்டம்

  ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறப்பட்டன.கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தளர்வுகளை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தவில்லை. மீன் மார்க்கெட், காய்கனி மார்க்கெட் எங்கிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான பஸ்களில் நூறு சதவீத கூட்டம் இருக்கிறது.

  கொரோனா வேகம்

  கொரோனா வேகம்

  இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் கொரோனா ஏறுமுமாக இருக்கிறது. கடந்த 2 நாட்களில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1,859 பாதிப்புகள் இருந்த நிலையில் நேற்று 1,947 பாதிப்புகள் என்று மீண்டும் 2,000-ஐ கடக்க தயாராக இருக்கிறது கொரோனா. சென்னை, கோவை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது.

  சென்னையில் அதிகரிப்பு

  சென்னையில் அதிகரிப்பு

  சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 185 என்ற அளவில் இருந்த நிலையில் நேற்று 215 ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் பாதிப்பு 200-ஐ கடந்துள்ளது. இது சென்னையில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க போகும் ஆரம்ப நிலைகளை காட்டுகிறது. கடந்த நாட்களாகவே தலைநகரில் பாதிப்பு வேகமெடுத்துள்ளது.

  பாஸிட்டிவ் ரேட்

  பாஸிட்டிவ் ரேட்

  சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிட்டிவ் ரேட் 0.5% முதல் 0.7% வரை அதிகரித்துள்ளது என்று சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த். சென்னையில் இப்போது தினமும் 27,286 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. ஆக்டிவ் கேஸ்களும் 1569 ஆக அதிகரித்து அதிர்ச்சியை கொடுக்கிறது என்று விஜய் ஆனந்த் கூறுகிறார்.

  மாநகராட்சி நடவடிக்கை

  மாநகராட்சி நடவடிக்கை

  தமிழ்நாட்டில் கொரோனா முன்னேற்றம் அடைந்து வருவதால் ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீடித்துள்ள தமிழ்நாடு அரசு, கூடுதல் தளர்வுகள் ஏதும் வழங்கவில்லை. சென்னையிலும் பாராட்டும்படியாக மாநகராட்சி முன்கூட்டியே விழித்துக் கொண்டுள்ளது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள் செயல்பட தடை விதித்துளளது;.

  முதல்வர் வேண்டுகோள்

  முதல்வர் வேண்டுகோள்

  கொரோனா எழுச்சியை தடுக்க வேண்டுமானால் மக்கள் தாங்களே சுய கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் கூட்டம் கூடும் இடங்களை மூட மாவட்ட கலெக்டர்கள், போலீசார் ஆகியோரே முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  English summary
  the corona positive rate (positive rate increased from 0.5% to 0.7%) and the number of active cases increased to 1569 In Chennai, This shows the early stages of continuous increase in infection in Chennai
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X