சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் முடிவுக்கு வரும் கொரோனா.. தொடர்ந்து சரியும் கேஸ்கள்.. உயிரிழப்பும் குறைகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிக பாதிப்பில் இருந்து வந்த கோவையில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் விடுதி.. கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் என்னென்ன?.. கல்வித்துறை உத்தரவு! பள்ளி மாணவர்கள் விடுதி.. கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் என்னென்ன?.. கல்வித்துறை உத்தரவு!

தொடர்ந்து குறையும் கொரோனா

தொடர்ந்து குறையும் கொரோனா

தமிழக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 1,200-க்குள் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். மொத்த பாதிப்பு 26,94,089 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பும் குறைவு

உயிரிழப்பும் குறைவு

கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். அரியலூரில் 3 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் 2 பேரும், இறந்தனர். சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவுக்கு பேர் 36,004 உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,374 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,44,805 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

எத்தனை பேருக்கு சோதனை

எத்தனை பேருக்கு சோதனை

13,280 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,24,700 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,92,56,822 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 141 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 150-க்கு கீழே குறைந்து வருகிறது.. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

கோவை ஆறுதல்

கோவை ஆறுதல்

கோவையில் 132 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா குறைந்து வருகிறது. செங்கல்பட்டில் 97 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும், மதுரையில் 17 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 19 பேருக்கும், திருவள்ளூரில் 40 பேருக்கும், திருச்சியில் 45 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 81 பேருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ஈரோட்டில் 72 பேருக்கும், சேலத்தில் 54 பேருக்கும், நாமக்கல்லில் 55 பேருக்கும், தஞ்சாவூரில் 54 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.

English summary
Corona infection continues to decline in Tamil Nadu. The corona has come under control in Coimbatore, which has been hit hard. In Chennai, the corona continues to drop below 150
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X