சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் ஒருபக்கம் குறையும் கொரோனா.. மறுபக்கம் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிக உயிர்ப்பலி எங்கே?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எந்த அளவுக்கு வேகமாக சென்றதோ, அந்த அளவுக்கு குறைந்து வருகிறது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்

ஆனால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதிவேகமாக குறையும் கொரோனா

அதிவேகமாக குறையும் கொரோனா

ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த 5 நாட்களாக பாதிப்பு குறைந்து ஆறுதல் அளிக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 30,000-க்கு கீழே கொரோனா வந்துள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 32,52,751 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது.

உயிரிழப்பு தொடர் அதிகரிப்பு

உயிரிழப்பு தொடர் அதிகரிப்பு

சென்னையில் அதிகபட்சமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து ஆறுதலை ஏற்படுத்தினாலும், உயிரிழப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. கோவையில் 7 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் 5 பேர் இறந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 37,412 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 28,620 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 30,01,805 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள் எத்தனை?

ஆக்டிவ் கேஸ்கள் எத்தனை?

2,13,534 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,37,258 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 6,01,61,970 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 5591 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. செங்கல்பட்டில் 1883 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை, சேலம்

மதுரை, சேலம்

கோவையில் 3629 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 539 பேருக்கும், மதுரையில் 582 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 970 பேருக்கும், திருவள்ளூரில் 697 பேருக்கும், திருச்சியில் 650 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1877 பேருக்கும், ஈரோட்டில் 1314 பேருக்கும், சேலத்தில் 1431 பேருக்கும், நாமக்கல்லில் 728 பேருக்கும், தஞ்சாவூரில் 749 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 156 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 847 பேருக்கும், தூத்துக்குடியில் 330 பேருக்கும், நெல்லையில் 416 பேருக்கும், விருதுநகரில் 489 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Corona infection has been confirmed in 28,515 people in Tamil Nadu today. The faster the corona infection in Tamil Nadu, the lower it is. But the death toll is rising day by day. The daily death toll in Chennai is high
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X