சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேண்டமிக் கொரோனா.. "எண்டமிக்காக" மாறுகிறதா?.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. இனி என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: "பேண்டமிக்" நோய் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது "எண்டமிக்" நோயாக மாற வாய்ப்புள்ளதாக உலக மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    Pandemic ஆக இருக்கும் Coronavirus.. Endemic தொற்றாக மாறலாம்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் எல்லாம் ஒன்றாக போராடிக்கொண்டிருக்கிறது. தஞ்சாவூரில் நண்பருக்கு ஆக்சிஜன் வேண்டி ட்வீ ட் போடும் நபர் தொடங்கி லண்டனில் கொரோனாவிற்கு எதிரான புதிய எம்ஆர்என்ஏ ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆராய்ச்சியாளர் வரை உலகம் முழுக்க ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் கொரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    காவி கொடியுடன்.. காஸ்ட்லி காரில் வந்திறங்கிய பாஜக காந்தி.. அதிரடியாக வைரலாகும் போட்டோ! காவி கொடியுடன்.. காஸ்ட்லி காரில் வந்திறங்கிய பாஜக காந்தி.. அதிரடியாக வைரலாகும் போட்டோ!

    2019 டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது இரண்டாம் அலையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலை மிக கொடியதாக மாறி உள்ளது. முதலில் வெறும் எபிடெமிக் வைரஸாக இருந்த கொரோனா அதன்பின் பேண்டமிக் என்று உலக சுகாதார மையம் மூலம் அறிவிக்கப்பட்டது.

    அது என்ன பேண்டமிக் ?

    அது என்ன பேண்டமிக் ?

    பொதுவாக ஒரு நோய் தாக்குதல் ஒரு குறிப்பிட்டு இன குழு, அல்லது நிலப்பரப்பில் மட்டும் பரவினால் அது epidemic அதாவது தொற்று நோய் என்று அழைக்கப்படும். அதே நோய் பல நாடுகளுக்கு பரவி, பல நாட்டு மக்களை பாதித்தால் அது "பேண்டமிக் - pandemic - பெருந்தொற்று" என்று அழைக்கப்படும். முதலில் கொரோனா தோன்றி சில நாட்களில் அது எபிடெமிக் என்று அறிவிக்கப்பட்டது.

    கொரோனா

    கொரோனா

    அதன்பின் கொரோனா பல நாடுகளுக்கு பரவ பரவ உலக சுகாதார மையம் இதை பேண்டமிக் என்று அறிவித்தது. அதாவது உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவிவிட்டது. இதனால் இது பெருந்தொற்றாக மாறிவிட்டது என்று உலக சுகாதார மையம் அறிவித்தது. இந்த நிலையில் இந்த பேண்டமிக் தொற்று எண்டமிக் தொற்றாக மாற வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    என்ன மாற்றம்?

    என்ன மாற்றம்?

    எண்டமிக் தொற்று என்பது உலகம் முழுக்க ஒரு நோய் தாக்குதல் ஏற்பட்டு, எபிடெமிக் நோயாக இருந்து பேண்டமிக் நோயாக மாறி, பின் அதை அழிக்கவே முடியாமல் போய், அது மனித வாழ்க்கையோடு ஒரு அங்கமானால் அது எண்டமிக் தொற்றாக மாறும். அதாவது இந்த எண்டமிக் நோய் அழிக்கப்படாமல் எப்போதும் மக்களோடு இருக்கும். அவ்வப்போது குறிப்பிட்டு இடைவெளியில் அந்த நோய் மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சில நாடுகளில் தோன்றி மறையும். இதுதான் எண்டமிக் தொற்று.

    மக்கள்

    மக்கள்

    உலகில் பெரியம்மை மட்டுமே மொத்தமாக ஒழிக்கப்பட்ட பெருந்தொற்று ஆகும். மற்றபடி ஃப்ளு, மலேரியா, காலரா, எச்1என்1, எபோலா என்று பல நோய் தாக்குதல்கள் எண்டமிக் தொற்று தாக்குதல்கள் ஆகும். அதாவது இந்த நோய் தாக்குதல்கள் தினமும் மனிதர்களை தாக்காது. அதே சமயம் இது முற்றிலும் அழிக்கப்படவும் முடியாதது. மக்களோடு மக்களாக எப்போதும் இருக்கும். திடீரென ஒரு நாட்டில் கேஸ்கள் வரும், சில நாட்கள் மக்களை தாக்கிவிட்டு, பின் மறைத்துவிட்டு, பின் மீண்டும் வரும்.

    நிப்பா

    நிப்பா

    நிப்பா வைரஸ் இப்படித்தான் கேரளாவில் திடீரென ஏற்பட்டது. அதேபோல் ஆப்ரிக்க நாடுகளில் எபோலா, மலேரியா இப்படி அடிக்கடி தோன்றுவது வழக்கம். இந்த நோய்கள் எல்லாம் மனிதர்களுடன் எப்போதும் இருப்பது. அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெரிய அளவில் தோன்றி, மக்களை கொல்லும். திடீர் திடீரென மக்களிடையே பரவும்.. ஆனால் இந்த நோய்களை மொத்தமாக ஒழிக்க முடியாது.

    கொரோனா

    கொரோனா

    தற்போது கொரோனாவும் இதேபோல் எண்டமிக் தொற்று போல மாறும் என்று அமெரிக்காவில் உள்ள சிடிசி (Centers for Disease Control and Prevention) ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அதாவது இவர்களின் கருத்துப்படி கொரோனாவை முற்றாக அழிக்கவே முடியாது. இது மக்களிடையே அழிக்க முடியாத அளவிற்கு பரவிவிட்டது. இனி இதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும், ஆனாலும் திடீர் திடீரென இந்த வைரஸ் மீண்டும் மீண்டும் தோன்றி மக்களிடையே பரவும் என்று கூறுகிறார்கள்.

    எப்படி பரவும்

    எப்படி பரவும்

    உதாரணமாக ஒரு நாட்டில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், எதிர்காலத்தில் 1-2 வருடம் கழித்து அங்கு பயணம் செய்யும் வேறு ஒரு நாட்டு நபரால் மீண்டும் அங்கு கொரோனா பரவலாம், இதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. மக்கள் கொரோனாவோடு வாழ பழக வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    காரணம்

    காரணம்

    மக்கள் வேக்சின் எடுத்தாலும் உலகம் முழுக்க 100% மக்கள் வேக்சின் பெறுவது சிரமம். இதனால் எங்காவது இந்த வைரஸ் உயிர்ப்போடு பரவிக்கொண்டு இருக்கும். அதோடு மியூட்டேட் ஆகும் கொரோனா வைரஸால் எதிர்காலத்தில், அது வேக்சின் போட்டவர்களுக்கு கூட பரவும் அபாயம் உள்ளது. புதிய மியூட்டேட் கொரோனா வைரஸ் காரணமாக வேக்சின் எடுத்தவார்கள் கூட 1-2 வருடங்களுக்கு பின் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     மீண்டும்

    மீண்டும்

    இதெல்லாம் போக தற்போது வேக்சின் எடுத்தவர்களுக்கும் கூட ஆண்டிபாடி நீண்ட மாதங்களுக்கு இருக்காது , ஆகவே மீண்டும் புதிய வேவ் தோன்றலாம், இதனால் மீண்டும் மீண்டும் வேக்சின் எடுக்க வேண்டும், இல்லையென்றால் இதை கட்டுப்படுத்தவே முடியாது என்கிறார்கள். அதே சமயம் மக்களோடு மக்களாக கொரோனா வைரஸ் வாழ்க்கை முறையில் கலந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் கூறுகிறார்கள்.

    எண்டமிக் தொற்று மாற்றம்

    எண்டமிக் தொற்று மாற்றம்

    கொரோனா எண்டமிக் தொற்று போல மாறும். பல நாடுகளில் கண்டிப்பாக உயிர்ப்புடன் இருக்கும். சில நாடுகளில் தீவிரமான மோசமான மியூட்டேட் வகை கொரோனா கூட தோன்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம் இந்த கொரோனா காரணமாக நீண்ட வருடங்களுக்கு இப்போது இருப்பது போன்ற லாக்டவுன்கள் நீடிக்காது. மக்கள் இதோடு வாழ் பழகிக் கொள்வார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எப்படி மலேரியா, காலரா உலகில் இருந்தாலும் மக்கள் உயிர் வாழ்கிறார்களோ அதேபோல் இதுவும் ஒரு எண்டமிக் தொற்றாக மக்களின் வாழ்க்கையில் கலந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    Covid-19 may become an Endemic in coming years from a worldwide Pandemic: Here are the reasons given by CDC and other researchers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X