சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட எதிர்ப்பு சக்தி உணவுகளை வழங்க ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஏழை குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறமுடியாத சூழல் உள்ளது. குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட எதிர்ப்பு சக்தி உணவுகளை வழங்க ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆர்.சுதா தாக்கல் செய்துள்ள மனு விபரம்:

COVID-19: Mid-day meals unavailable to children, HC issues notice to TN Govt

கொரோனா தொற்று காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறமுடியாத சூழல் இருக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த குடும்பங்களில் அரசு தரும் ஆயிரம் ரூபாயை நம்பியே வாழ்வாதாரம் உள்ளது.

கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்கதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க

Recommended Video

    கபசுர குடிநீர் குடிங்க...நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்-சித்த மருத்துவர்கள்

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்குவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Madras High Court on Monday asked the TamilNadu government the efforts to prevent spread of COVID-19, the schemes for providing nutritional food to the school children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X