சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி.. அதுவும் இந்த 5 இடங்கள்தான் மிக மிக மோசம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம் 9.2% அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார்.

அண்ணாநகர், தேனம்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய 5 இடங்கள் மட்டும் சென்னையின் மொத்த பாதிப்பில் 50% பாதிப்பு அளவை கொண்டுள்ளன.

அரசியல்வாதிகளை துரத்தும் கொரோனா.. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி!அரசியல்வாதிகளை துரத்தும் கொரோனா.. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் விஸ்வரூபம்

தமிழகத்தில் விஸ்வரூபம்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தாக்கம் மீண்டும் அதிவேகத்தில் உள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்புகள் 8,000-ஐ நெருங்கி சென்று வருகிறது. சென்னையிலும் தினமும் 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ், தியேட்டர்கள், கோவில்களில் கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பாதிப்பு உச்சம்

இந்த நிலையில் சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம் 9.2% அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். அதாவது சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தினசரி பாதிப்பு 169 ஆக இருந்துள்ளது. அதன் பின்னர் தினசரி பாதிப்பு தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து கடந்த 4-ம் தேதி 1344 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாநகரில் அதிக பாதிப்பு

அண்ணாநகரில் அதிக பாதிப்பு

அண்ணாநகர், தேனம்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய 5 இடங்கள் மட்டும் சென்னையின் மொத்த பாதிப்பில் 50% பாதிப்பு அளவை கொண்டுள்ளன. அண்ணாநகரில் 12%, தேனாம்பேட்டையில் 11%, கோடம்பாக்கத்தில் 10%, ராயபுரத்தில் 10%, அம்பத்தூரில் 9%, திரு.வி.க நகர் 8%, வளசரவாக்கம் 7%, அடையார் 7%, தண்டையார்பேட்டை 5%, ஆலந்தூர் 5%, பெருங்குடி 4%, மாதவரம் 4%, திருவொற்றியூர் 2%, சோழிங்கநல்லூர் 2%, மணலி 1% மற்றும் மற்ற மாவட்டங்கள் 3% ஆக்டிவ் கேஸ்களை கொண்டுள்ளன.

அடையாறில் எவ்வளவு?

அடையாறில் எவ்வளவு?

எண்ணிக்கையை பொறுத்தவரை அண்ணாநகரில் 978, தேனாம்பேட்டையில் 933, கோடம்பாக்கத்தில் 795, ராயபுரத்தில் 785, அம்பத்தூரில் 762, திரு.வி.க நகரில் 678, வளசரவாக்கத்தில் 570, அடையாரில் 567, தண்டையார்பேட்டையில் 428, ஆலந்தூரில் 400, பெருங்குடியில் 365, மாதவரத்தில் 320, மற்ற மாவட்டங்களில் 260, திருவொற்றியூரில் 169, சோழிங்கநல்லூரில் 141, மணலியில் 95 ஆக்டிவ் கேஸ்களை கொண்டுள்ளதாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

English summary
Corona data analyst Vijay Anand said that the Corona positive rate in Chennai has grown by an astounding 9.2%
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X