சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புள்ள கொரோனா மாமாவுக்கு.. தன்யா எழுதுவது.. உருக்கமான கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைப் போய் வா என்று ஒரு சிறுமி கூறுவதைப் போன்ற சிறு குறும்படம்- சௌம்யா நாடகக் குழு வெளியிட்டுள்ளது. டிவி ராதாகிருஷ்ணன் கதை வசனம் எழுதி உள்ளது. ஆனந்த் சீனிவாசன் இயங்கி உள்ளார்.

Recommended Video

    Corona Short film : வாங்க! கொரோனா மாமா!

    தன்யா ராகவன் என்ற குழந்தை இந்த குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த குழந்தை கொரோனாவுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதம் நெஞ்சை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

    அதில் குழந்தை கூறியிருப்பதாவது: "அன்புள்ள கொரோனா மாமாவுக்கு, நீ வர்றதுக்கு முன்னால, காத்தால அம்மா என்ன அவசர அவசரமாக எழுப்பி விட்டு, பல் தேய்க்க சொல்லி, குளிப்பாட்டி, யூனிபார்ம் போட்டுவிட்டு, இரண்டு பிரெட்டு துண்ட வாயில திணிச்சு என்னை ஸ்கூலுக்கு அனுப்பி வைப்பா.

    சிறையில் உள்ள கைதிகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா வந்துள்ளது.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி சிறையில் உள்ள கைதிகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா வந்துள்ளது.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

    அம்மா பாராட்டமாட்டா

    அம்மா பாராட்டமாட்டா

    ஸ்கூலு முடிஞ்சதும், எங்க வீட்டு வேலைக்காரம்மா சின்னம்மா, என்னை ஸ்கூல்ல இருந்து அழைச்சுண்டு வந்து, எனக்கு பசிச்சா ஹோட்டல்ல இருந்து ஏதாவது வாங்கித்தருவா.. அப்புறம் அம்மா ஆபிஸ்ல இருந்து 6 மணிக்கு வருவா.. ஸ்கூல்ல சஹானா என்னை அடிச்சது, மிஸ்சு என்ன குட் கேள்ன்னு சொன்னது, எல்லாம் அம்மாக்கிட்ட சொல்லுவேன். உம்..முன்னு கேட்டுப்பா அவ்வளவுதான். அம்மா என்ன பாராட்டமா இருக்குறது எனக்கு ரெம்ப வருத்தம் கொடுக்கும் தெரியுமா?

    சூடா டிபன் செஞ்சு தருவா அம்மா

    சூடா டிபன் செஞ்சு தருவா அம்மா

    ஆனா மாமா நீ வந்தது, எனக்கு ரெம்ப குஷியாகிடுச்சு தெரியுமா? ஸ்கூல் லீவு.. ஆபிஸ்க்கு போகாம அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டிலேயே வேலை.. ஜாலி ஜாலின்னு குதிப்பேன்.. அம்மாவும் அப்பாவும் கூடவே இருக்கா.. அம்மா எனக்கு டெய்லி இட்லி, தோசை, பூரின்னு சூடா டிபன் செஞ்சு கொடுக்குறா.. சம் டைம் (சில சமயம்) ஊட்டி கூட விடுறா..

    நல்ல மாமான்னு நெனைச்சேன்

    நல்ல மாமான்னு நெனைச்சேன்

    ஒருத்தர் நல்லது செஞ்சா தேங்க்ஸ் (நன்றி) சொல்லனும்னு மாலதி மிஸ் சொல்லியிருக்காங்க.. அதுனால அப்பப்ப உனக்கு தேங்க்ஸ் சொல்வேன். ஆனால் மாமா நேத்து நைட்டு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல படுத்திருக்கும் போது, அப்பா சொன்னா.. நீ ரெம்ப பேர சாகடிச்சிட்டியாம்.. எல்லாரும் ஒன்னால கஷ்டப்படுறாலாம். இப்படியே போச்சுன்னா சாப்பாடுக்கு கூட கஷ்டப்படனுமாம்.. நீ நல்ல மாமான்னு நெனைச்சேன்.

    நீ கெட்ட மாமா

    நீ கெட்ட மாமா

    ம்ஹூம்.. இப்பதான் தெரிஞ்சது நீ கேட்ட மாமான்னு.. மாமா நாம யாருக்கும் கெட்டது பண்ணக்கூடாது. அப்படிப்பன்னுனா, சாமி நம்ம கண்ண சாமி குத்துமுன்னு அப்பா சொல்லுவா? நீ கெட்டது பன்ற, சாமி கண்ண குத்துறதுக்கு முன்னாடி, யாருக்கும் தெரியாம இந்த ஊர விட்டு எங்கயாவது போயிடு. அப்படி நீ போய்ட்டா.. உனக்கு தேங்க்ஸ்.. நான் சொல்லித்தான் நீ போய்ட்டேன் சஹானாகிட்ட பீத்திப்பேன். நான் சொன்ன மாதிரி நீ போய்ட்டேன்னா, நான் எல்லார்கிட்டயும் நீ கெட்ட மாமா இல்லை.. நல்ல மாமான்னு சொல்லுவேன். டாட்டா.. பாய் பாய்.. இப்படிக்கு தன்யா.." இவ்வாறு மழலை குரலில் குழந்தை பேசுவதாக கடிதம் முடிகிறது.

    English summary
    A child written letter to corona mama, she said covid 19 uncle should go out from the city. if out from city. she thanks to covid 19. covid 19 short film directed by anand srinivasan. acting by baby dhanya. story and dialogs by tv radhakrishnan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X