சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அறிகுறி, தடுப்பு நடவடிக்கைள்.. தமிழக அரசு புதிதாக வெளியிட்ட முழு தகவல் தொகுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் எளிய முறையில் முழுமையாக விளக்கி புத்தகமாக வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Tamil Nadu Lockdown Extension After May 31?

    அதில் கொரோனா நோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். வீட்டு கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல், பரிசோதனை முறை மற்றும் பரிசோதனை மையங்கள், மருத்துவமனை, உதவி எண்கள் என பல தகவல்களை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும்படி வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று உச்சபட்சமாக 800க்கும் அதிகமானோருககு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்துள்ளது.தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

    31-ஆம் தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு31-ஆம் தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு

    வண்ணப்படங்களுடன் கையேடு

    வண்ணப்படங்களுடன் கையேடு

    இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய வேண்டியவை குறித்தும், கொரோனா சந்தேகங்கள் குறித்தும் வண்ண படங்களுடன் கையடக்க புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதில் சில தகவல்களை மட்டும் பார்ப்போம். முழு தகவல்களை கீழே உள்ள பைலில் பாருங்கள்.

    தொற்று நோய்

    தொற்று நோய்

    கொரோனா வைரஸ் என்றால் என்ன?
    இது வேகமாக பரவக்கூடிய தொற்று நோய்
    கொரோனா நோயின் அறிகுறிகள்
    சளி, உடல் சோர்வு, வறட்டு இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், மூக்கில் நுகர்வு திறன் இழப்பு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு போன்றவை.

    கொரோனா நோய் பரவும் விதம்

    கொரோனா நோய் பரவும் விதம்

    இருமல் மற்றும் தும்மல் வரும் போது வெளிப்படும் நீர்த்திவலைகள படிந்துள்ள பொருட்களை தொடும் போது கைகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒருவருக்கு வரும் தொற்று ஒரு மாதத்தில் 406 பேருக்கு பரவும்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

    பொதுவாக அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இரண்டு மணிக்கு ஒரு முறை, இருமிய பின்பு, தும்மிய பின்னர், உணவு சமைப்பதற்கு முன் பின், சாப்பிடும் முன் பின். கழிவறையை பயன்படுத்திய பின், விலங்குகளை கையாண்ட பின், குப்பைகளை தொட்ட பின், கைகள் அழுக்குடன், கரைகள் தென்பட்டால், நோய் அறிகுறி உள்ளவரக்ளை கவனித்துக்கொள்ளும் போது கைகளை கழுவ வேண்டும். கொரோனா நோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். வீட்டு கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல், பரிசோதனை முறை மற்றும் பரிசோதனை மையங்கள், மருத்துவமனை, உதவி எண்கள் போன்ற முழு தகவல்களை மேலே உள்ள பிடிஎப்பில் பார்க்கலாம்.

    English summary
    tamilnadu govt released new guidlince book for corona symptoms. preventions and hospitals details
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X