சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு கொரோனா பரிசோதனை.. முதல்முறையாக லிஸ்ட் வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மொத்தம் 1,21,950 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,

ஜூன் 7ம் தேதியான இன்று மட்டும் 16,275 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5,92,970 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனிநபர்கள் என்று பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 15,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 5,66,314 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. எங்கெல்லாம் கடும் பாதிப்பு.. முழு லிஸ்ட்தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. எங்கெல்லாம் கடும் பாதிப்பு.. முழு லிஸ்ட்

 பரிசோதனை விவரம்

பரிசோதனை விவரம்

தமிழகத்தில் 31,667 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 7ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தையும், இதுவரை எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 கோவையில் அதிகம்

கோவையில் அதிகம்

சென்னையில் இதுவரை மொத்தம் 1,21,950 சாம்பிள்கள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 3,950, செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,958, கோவை - மாவட்டத்தில் 22,872, கடலூர் மாவட்டத்தில் 11,918, தருமபுரி மாவட்டத்தில் 9,854, திண்டுக்கல் மாவட்டத்தில் 7,582, ஈரோடு மாவட்டத்தில் 13,421, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,653 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 மதுரை 14102 பேருக்கு

மதுரை 14102 பேருக்கு

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9,885 சாம்பிள்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 18,366 சாம்பிள்கள், கரூர் மாவட்டத்தில் 8,218 சாம்பிள்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,565, சாம்பிள்கள், மதுரை மாவட்டத்தில் 14,102 சாம்பிள்கள், நாகை மாவட்டத்தில் 7,958 சாம்பிள்கள், நாமக்கல் மாவட்டத்தில் 7,727 சாம்பிள்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் 3,999 சாம்பிள்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,243 சாம்பிள்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,074 சாம்பிள்கள் எடுத்து, இதுவரை கொரோனா பரிசோதனை (பிசிஆர்) செய்யப்பட்டுள்ளது.

 நெல்லையில் 17624 பேர்

நெல்லையில் 17624 பேர்

ராணிப்பேட்டையில் 5,480, சேலம் - 22,751, சிவகங்கை - 5400, தென்காசி - 7,163, தஞ்சை - 17,820, தேனி - 16,945, நீலகிரி - 5,604, திருவள்ளூர் - 11,065, திருவாரூர் - 8,448, திருச்சி - 14,453, நெல்லை - 17,624, திருப்பத்தூர் - 9,911, திருப்பூர் - 8,153, திருவண்ணாமலை - 21,996, தூத்துக்குடி - 13,227, வேலூர் - 16,279, விழுப்புரம் - 9,795, விருதுநகர் - 10,803 எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடைப்புக்குறியில் நோய் தொற்று பாதிப்பு விவரம்

அடைப்புக்குறியில் நோய் தொற்று பாதிப்பு விவரம்

  • அரியலூர் 3,950 (380)
    • செங்கல்பட்டு 13,958 (1854)
      • சென்னை 1,21,950 (22149)
        • கோவை 22,872 (161)
          • கடலூர் 11,918 (481)
            • தர்மபுரி 9,854 (13)
              • திண்டுக்கல் 7,582 (167)
                • ஈரோடு 13,421 ( 73)
                  • கள்ளக்குறிச்சி 8,653 (272)
                    • காஞ்சிபுரம் 9,885 (516)
                      • கன்னியாகுமரி 18,366 ( 87)
                        • கரூர் 8,218 ( 87)
                          • கிருஷ்ணகிரி 6,565 (37)
                            • மதுரை 14,102 ( 312)
                              • நாகப்பட்டினம் 7,958 (76)
                                • நாமக்கல் 7,727 (85)
                                  • பெரம்பலூர் 3,999 (143)
                                    • புதுக்கோட்டை 6,243 ( 33)
                                      • ராமநாதபுரம் 7,074 (106)
                                        • ராணிப்பேட்டை 5,480 (130)
                                          • சேலம் 22,751 (216)
                                            • சிவகங்கை 5,400 (35)
                                              • தென்காசி 7,163 (103)
                                                • தேனி 16,945 (124)
                                                  • நீலகிரி 5,604 (14)
                                                    • திருப்பத்தூர் 9,911 (42)
                                                      • திருவள்ளூர் 11,065 (1329)
                                                        • திருவண்ணாமலை 21,996 ( 492)
                                                          • திருவாரூர் 8,448 (59)
                                                            • தூத்துக்குடி 13,227 (329)
                                                              • திருநெல்வேலி 17,624 (386)
                                                                • திருப்பூர் 8,153 (114)
                                                                  • திருச்சி 14,453 (116)
                                                                    • வேலூர் 16,279 ( 64)
                                                                      • விழுப்புரம் 9,795 (380)
                                                                        • விருதுநகர் 10,803 (149)
                                                                        • தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 6420 பேர் என விகிதத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இந்த விகிதம் 16903 ஆகவும், தேனியில் 12060 ஆகவும் திருநெல்வேலியில் 9386ஆகவும் உள்ளது.

English summary
tamilnadu: District Wise covid 19: Sample Tested Reporting Status as on 07.06.2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X