சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 23 மாவட்டங்கள்.. உயரும் கொரோனா.. வரப்போகும் கட்டுப்பாடுகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்பட 23 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதனிடையே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளன,

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil

    சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் 1,60,897 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

    தமிழகத்தில் நேற்று 2,178 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் நேற்று மட்டும் உயிரிழந்தனர்.

    பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி.. ஆண்களை ஆபாசமாக எடுத்த 80 வீடியோக்கள்.. அதிர வைக்கும் மோசடி.. 5 பேர் கைதுபெண்கள் பெயரில் ஃபேக் ஐடி.. ஆண்களை ஆபாசமாக எடுத்த 80 வீடியோக்கள்.. அதிர வைக்கும் மோசடி.. 5 பேர் கைது

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 1700 என்கிற அளவிற்கு குறைந்து இருந்த கொரோனா படிப்படியாக உயர்ந்து நேற்று 2000 ஆயிரத்திற்கு நெருங்கி உள்ளது. குறிப்பாக கொரோனா பரவல் அதிகரிப்பு என்பது சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளது.

    ஈரோடு

    ஈரோடு

    கொரோனா உச்சத்தில் உள்ள கேரளாவை ஒட்டி உள்ள கோவையில் 28ம் தேதி 179 ஆக இருந்த பாதிப்பு 29ம் தேதி 188, 30ம் தேதி 230, நேற்று 246 ஆக உயர்ந்து இருக்கிறது. இதேபோல் கோவையின் பக்கத்து மாவட்டமான ஈரோட்டில் 28ம் தேதி 140 ஆக இருந்த நிலையில் 29ம் தேதி 166 பேர், 30ம் தேதி 171 பேர், நேற்று 165 ஆக காணப்படுகிறது.

    தஞ்சை

    தஞ்சை

    செங்கல்பட்டில் நேற்று முன்தினம் 109 பேராக இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று 122 ஆக அதிகரித்தது. தஞ்சாவூரில் 29ம் தேதி 102ல் இருந்து 30ம் தேதி 105 ஆகவும், நேற்று 124 ஆகவும் உயர்ந்து காணப்படுகறிது. மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை 100க்கு கீழ் உள்ளது.

    கொரோனா உயர்வு

    கொரோனா உயர்வு

    எனினும் கொரோனா பரவல் 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஜுலை 30ம் தேதியைவிட 31ம் தேதி கணிசமாக அதிகரித்துள்ளது.பெரிய அளவில் உயர்வு இல்லை என்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கொரோனா அதிகம் பரவும் மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    English summary
    In Tamil Nadu, 1,986 people were confirmed infected in a single day yesterday. Corona infection has increased in 23 districts including Chennai, Coimbatore, Erode, Chengalpattu and Thanjavur. It is therefore necessary for the people in these districts to be vigilant. In the meantime the restrictions are to be tightened.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X